பிரபலமான செய்தி வாசிப்பு அப்பிளிக்கேஷனை அறிமுகம் செய்த Flipboard நிறுவனம் தற்போது புதிய பதிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.
அதாவது சுமார் 30,000 தலைப்புக்களைக் கொண்ட செய்திகளை அறிந்துகொள்ளும் வகையில் முன்னர் வெளியிட்ட அப்பிளிக்கேஷனை மீள வடிவமைத்து அறிமுகம் செய்துள்ளது.
இதன் மூலம் நாள்தோறும் பொதுவான செய்திகள், வணிகச் செய்திகள், தொழில்நுட்பச் செய்திகள், விளையாட்டுச் செய்திகள் உட்பட கலாச்சார செய்திகளையும் அறிந்துகொள்ள முடியும்.
மேலும் இதனை iOS, Android மொபைல் சாதனங்களில் நிறுவி பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக