தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 10 நவம்பர், 2014

தீராத தலைவலியால் அவஸ்தைபடுறீங்களா?





பொதுவாக ஆண்களை விட அதிக பெண்களே தலையில் நீர்கோர்த்து கொள்ளும் பிரச்னையால் அவதிப்படுகின்றனர்.
இன்றைய இயந்திர வாழ்க்கையில் தங்களது முகத்தை அழகுபடுத்திக் கொள்ள கொள்ள ஆர்வம் காட்டும் பெண்களில் சிலர், தலையை பராமரிப்பதில் அதிகம் கவனம் செலுத்துவதில்லை.
தலைக்கு குளித்துவிட்டு சரியாக துவட்டாமல் வருவதால், அடிக்கடி நீர்கோர்த்து கொண்டு தலைவலி ஏற்படுகின்றது.
தலையை காயவைக்க குறைந்தது 5 நிமிடமாவது ஒதுக்கினால் மட்டுமே இப்பிரச்சனையை தவிர்க்க முடியும்.
நீர்கோர்க்காமல் இருக்க சூப்பர் வழிகள்
தலையை காய வைத்ததும் நீர்கோர்த்து கொண்டிருந்தால் கொதிக்கும் நீரில் நுணா இலை, நொச்சி இலை, எருக்கம் இலை போட்டு வேது (ஆவி) பிடிக்கலாம்.
கொதிக்கும் நீரில் செங்கல் போட்டு, அந்த ஆவியை நன்கு முகர்ந்து உள்ளிழுக்கலாம் அல்லது நீட்டு மஞ்சள் தீயில் காண்பித்து முகரலாம்.
இவ்வாறு மாதம் மூன்று முறை செய்துவர தலையில் நீர் கோர்க்கும் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
இதுபோன்ற வேளைகளில் காபி, இஞ்சி டீ, சூப் போன்ற சூடான பானங்களை குடிப்பது மிகவும் நல்லது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக