ஆலிவ் எண்ணெய் உடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பது மட்டுமின்றி, அழகை மெருகூட்டவும் உதவுகிறது.
இந்த எண்ணெயை உணவில் சேர்த்து சமைப்பதால் எண்ணற்ற பலன்கள் கிடைக்கின்றன.
* இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுவதுடன், உடலில் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை குறைக்கவும் உதவுகிறது. எனவே இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் வருவது தடுக்கப்படும்.
* இதில் உள்ள மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள், சர்க்கரை நோயை அண்டவிடாமல் தடுக்கும், தினமும் 2 ஸ்பூன் ஆலிவ் ஆயிலை சேர்த்து வந்தால் 50 சதவிகிதம் நீரிழிவு வரும் வாய்ப்புகள் குறைவு என ஆய்வின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
* இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் வைட்டமின் ஈ அதிகம் உள்ளது, இவைகள் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கிறது.
* மேலும் உடலில் இரத்த ஓட்டத்தை சீராக வைக்க வைட்டமின் ஈ அவசியம், எனவே தினமும் உணவில் சேர்த்து வருவதன் மூலம் உடலானது பொலிவுடன் இருக்கும்.
* மற்றொரு முக்கிய பயனாக மன அழுத்தத்தை குறைப்பதுடன், செரிமான பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறது.
* இரவில் படுக்கும்முன் தினமும் ஆலிவ் ஆயிலை முகத்தில் தடவி வந்தால் அழுக்குகள் வெளிவருவதுடன், வயதான தோற்றத்தையும் கட்டுப்படுத்தும், மேலும் உதடுகளில் தடவும் போது வெடிப்புகள் நீங்கி மென்மையாக இருக்கும்.
* குளிப்பதற்கு முன் முகத்தில் ஆலிவ் ஆயிலுடன் சிறிது வினிகரை கலந்து தடவி ஊறவைத்து வெதுவெதுப்பான நீரில் குளித்தால் சூரியக் கதிரினால் சருமம் பாதிப்படைவதை தடுக்கலாம்.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக