தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 15 நவம்பர், 2014

தாயின் கருவறையில் சிரித்துக் கொண்டிருந்த அழகிய குழந்தை!

பிரித்தானியாவில் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு எடுக்கப்பட்ட ஸ்கேனில், அவரது குழந்தை வயிற்றில் சிரித்தபடி இருந்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவின் ப்ரூன்லி நகரை சேர்ந்த ஏமி மற்றும் லெயிடன் தம்பதியினர் தங்களது குழந்தை 31 வார கருவாக இருக்கும் போது ஸ்கேன் எடுத்துள்ளனர்.
இதில் லீயோ என பெயரிட்டுள்ள இந்த குழந்தை சிரித்து கொண்டே இருந்துள்ளது.
இதுகுறித்து தாயார் கூறுகையில், ஸ்கேனை பார்த்தவுடன் அதிசயமாக இருந்ததாகவும், ஸ்கேன் செய்த மருத்துவர்களும் ஆச்சரியத்தில் திகைத்து போனார்கள் என்று கூறியுள்ளார்.
தற்போது, லியோ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த குழந்தை பிறந்தவுடனும் சிரித்து கொண்டே தான் இருக்கிறது என்பது குறிப்பிடதக்கது.
தற்போது தூக்கத்திலும் சிரித்து கொண்டேயிருக்கும் லியோவுக்கு தற்போது 4 மாதங்கள் ஆகிறது.
இக்குழந்தையின் புகைப்படங்களை பார்த்து அனைவரும் ரசிப்பதாகவும், மேலும் பல மொடல் கம்பெனிகள் கேட்டு வருவதாகவும் லியோவின் தாயார் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக