எண்ணெய் வழியும் சருமத்தை விட வறட்சியான சருமம் உள்ளவர்களுக்கு தான் பிரச்னைகள் ஏராளம்.
அதிலும் குறிப்பாக முதுமைத் தோற்றம், சரும வெடிப்பு போன்றவை மிக எளிதில் தொற்றிக் கொள்ளும்.
இவர்களுக்கான சூப்பர் டிப்ஸ்
* சிறிது வாழைப்பழத்தை மசித்து அதில் 2 டீஸ்பூன் தேன் மற்றும் தயிர் கலந்து முகத்தில் தடவி, 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
* அவகேடோ பழத்தை மசித்து, அதனை முகத்தில் தடவி 1/2 மணிநேரம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவி பின் குளிர்ந்த நீரில் கழுவி வந்தால் சருமத்தில் உள்ள அழுக்குகள் வெளியேறுவதுடன் வறட்சி நீங்கி பொலிவுடன் இருக்கும்.
* சிறிதளவு வெண்ணெயுடன் தண்ணீர் கலந்து முகத்தில் தடவி 1/2 மணிநேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவுங்கள்.
* வெங்காய சாற்றில் 2 டீஸ்பூன் தேன் கலந்து முகத்தில் தடவி ஊறவைத்து கழுவ வேண்டும், இவ்வாறு செய்யும் போது சுருக்கங்கள் மறைந்து இளமையுடன் காட்சியளிக்கலாம்.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக