தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 14 நவம்பர், 2014

உலகின் முதல் சோலார் சாலை! (வீடியோ இணைப்பு) !

உலகிலேயே முதன்முறையாக நெதர்லாந்தில் சோலார் சாலை அமைக்கப்பட்டுள்ளது.
உலகில் அதிக‌ப்படியாக இருசக்கர வாகனங்களை பயன்படுத்தும் நாடுகளில் ஒன்றான நெதர்லாந்தில் சுமார் 70 மீட்டர் தூரத்திற்கு சோலார் சாலை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சாலையில் வாகனங்கள் செல்லும் போது தகுந்த பிடிமானம் கிடைக்குமாறும் உராய்வு சத்தம் அதிகம் இல்லாதவாறும் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வாகனம் ஓட்டிச் செல்லும் போது, சற்று தொலைவில் சாலை சேதம் அடைந்திருந்தாலோ ஏதும் விபத்து ஏற்பட்டிருந்தாலோ வாகன ஓட்டிகளுக்கு அபாய விளக்கு மூலம் எச்சரிக்கை செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த சாலையின் மூலம் குறிப்பிட்ட அளவு மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்தி தொடர்பாளர் கூறுகையில், நெதர்லாந்தில் இரு சக்கர வாகனங்கள் அதிகம் உள்ளதால் இதுபோன்ற முயற்சிகள் அதிகரிக்கப்படும் என்றும் இதற்கான‌ ஆராய்ச்சி மற்றும் செயல்பாடுகளுக்கு 3.7 மில்லியன் யூரோ செலவாகியுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக