முதல் கதை: நான் பிறக்கும் போது எனது தாய், தந்தை படித்துக் கொண்டிருந்ததால் என்னை அவர்கள் தத்துக் கொடுத்தனர். என்னை தத்தெடுத்தவர்கள் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும், என்னை குறையின்றி வளர்த்தனர்.
பொருளாதார பிரச்னையால் படிப்பை தொடர வேண்டாம் என முடிவெடுத்த நான், நண்பர்கள் வீட்டில் தங்கினேன். அருகில் இருந்த ஹரே ராமா ஹரே கிருஷ்ணா கோவிலில் வாரம் ஒரு முறை வழங்கும் அன்னதானத்திற்காக காத்திருந்துள்ளேன்.
பின்னர் அச்சுக்கலை தொடர்பான வகுப்புகளுக்கு சென்று அதனை கற்று கொண்டேன். இதையடுத்து பத்து ஆண்டு உழைப்பின் பயனாக, "மெகின்டோஷ்' என்ற முதல் கணிணியை நான் வடிவமைத்த போது அதில் நான் கற்ற டைப்போகிராபியை (அச்சுக் கலை) பயன்படுத்த முடிந்தது.
கஷ்டங்கள் தான் என்னுள் இருந்த உள்ளுணர்வையும் தன்னம்பிக்கையும் வளர்த்தன. வாழ்க்கையைப் பின்னோக்கி பார்க்கும்போது தான் நடப்பது புரியும், நமக்கு நடப்பவை எல்லாம் ஏதோ ஒரு சம்பந்தத்தை ஏற்படுத்தவே நடக்கிறது.
2வது கதை: 20 வயதில் என் வீட்டில் ஆப்பிள் நிறுவனத்தை துவக்கிய நான், 10 ஆண்டு உழைப்பிற்கு பின் 2 பில்லியன் டொலர்களுடன் 4,000 பேரை வேலையில் அமர்த்தினேன்.
30 வயதில் என்னுள் எழுந்த வெறிக்கு அளவே இல்லை. அப்போது நான் உருவாக்கிய என் சொந்த நிறுவனத்திலிருந்து வெளியேற்றப்பட்டேன்.
வாழ்க்கை சில சமயங்களில் நம் தலையில் கல்லை தூக்கி எறியும், நம்பிக்கையை மட்டும் இழக்காதீர்கள்.
இதையடுத்து ஐந்து ஆண்டுகளில் "நெக்ஸ்ட்' மற்றும் "பிக்ஸர்' ஆகிய நிறுவனங்களை துவக்கினேன். இன்று உலகின் சிறந்த அனிமேஷன் ஸ்டூடியோவாக பிக்ஸர் உள்ளது.
சில காலம் கழித்து ஆப்பிள் நிறுவனம், "நெக்ஸ்ட்டை' வாங்கியதால் நான் மறுபடியும் புதிய உத்வேகத்துடன் ஆப்பிளில் இணைந்தேன்.
வேலையானது உங்கள் வாழ்கையின் பெரும் பகுதியை வியாபித்திருக்கிறது. அதனால் உங்களுக்கு பிடித்ததை செய்யுங்கள். அப்போது தான் மிக சிறந்த படைப்பு உங்களில் இருந்து வெளியாகும்.
3வது கதை: "உங்கள் வாழ்வின் ஒவ்வொரு நாளையும் இறுதி நாளாக நினைத்து வாழ்ந்தால், ஒரு நாள் அது நிறைவேறும்' என்ற வாசகம் சிறு வயதில் எனக்கு ரொம்ப பிடிக்கும்.
தினமும் காலையில் எழுந்து கண்ணாடியில் முகம் பார்க்கையில் இன்றே நமக்கு இறுதி நாள் என்று நினைத்துக் கொண்டு வேலைகளை துவக்குவேன்.
2004ம் ஆண்டு எனக்கு கணையத்தில் புற்றுநோய் இருப்பது, பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டபோது கணையம் என்பது என்ன என்று கூட எனக்கு தெரியாது. இதையடுத்து செய்த அறுவை சிகிச்சைக்கு பின் தற்போது நான் நலமாக உள்ளேன்.
உங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரம் குறைவு, அதை வீணாக்காதீர்கள். மற்றவர்கள் கூறிய கருத்துகளை வேதவாக்காக கொண்டு வாழ்க்கையை நிர்ணயிக்காதீர்கள்.
உங்கள் உள்ளுணர்விற்கு மதிப்பளியுங்கள், "பசியோடு இருங்கள்; புதிய சிந்தனைகளோடு வாழுங்கள்' (Stay Hungry, Stay Foolish) என்று பேசியுள்ளார்.
|
தொலைக்காட்சி!!
இந்த வலைப்பதிவில் தேடு
புதன், 15 அக்டோபர், 2014
பசியோடு இருங்கள், புதிய சிந்தனைகளோடு வாழுங்கள்: ஸ்டீவ் ஜாப்ஸின் உரை (வீடியோ இணைப்பு) !
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக