| ஹீமாயூன் இறந்தபிறகு அக்பரை வளர்த்து ஆளாக்கி அரியணையில் அமர்த்திய பெருமைக்குரியவர் பைராம்கான்தான். இவர் அமைச்சராக இருந்தார். அவருடன் ஒருநாள் அக்பர் பேசிக்கொண்டிருந்தபோது, இரவு வெகுநேரம் ஆகிவிட்டது, பகல் முழுவதும் சிறிதும் ஓய்வின்றி அரசு வேலைகளில் ஈடுபட்டிருந்ததால் பைராம்கானுக்கு தூக்கம் வந்தது. இதைப் பார்த்த பேரரசர் கடுங்கோபம் கொண்டார், பைராம்கானே யாருடன் பேசிக்கொண்டிருக்கிறீர்? தெரிகிறதா? என்று இடிகுரலில் கேட்டார். அறிவுள்ள அந்த அமைச்சருக்கு தான் செய்த தவறு தெரிந்தது, அரசரின் கோபத்தை தணிக்க இவ்வாறு கூறினார். பேரரசே! நீங்கள் பேசுவதை நான் கவனத்துடன் கேட்டுக்கொண்டிருக்கிறேன், அரசர் பணியில் கண்களைக் கவனிக்க வேண்டும், துறவிகள் பணியில் உள்ளத்தைக் கவனிக்க வேண்டும். அறிஞர் பாணியில் நாவைக் கவனிக்க வேண்டும் என்பார்கள், அரசராகவும், துறவியாகவும், அறிஞராகவும் உள்ள தங்களிடம் எப்படி நடந்துகொள்வது என்ற சிந்தித்துக் கொண்டிருந்தேன், அதனால் தான் இந்தப்பிழை நேர்ந்தது. இனி எப்பொழுதும் எப்படி ஏற்படாது என்று பணிவுடன் சொன்னார், இதைக் கேட்ட பேரரசர் மகிழ்ந்தார், எந்தச் சூழ்நிலையையும் திறமையாகச் சமாளிக்கும் உம் அறிவுக் கூர்மைக்கு என் பாராட்டுக்கள் என்றார். அரசர்களிடமும், அதிகாரிகளிடமும் எப்போதும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். |
தொலைக்காட்சி!!
இந்த வலைப்பதிவில் தேடு
புதன், 15 அக்டோபர், 2014
தூங்கிய அமைச்சர்! !
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக