ஒரு வயதுக்கு மேல் அப்பாவிடம்
அடிக்கடி பேசாவிட்டாலும்,
அப்பாவை பற்றி அதிகம்
தெரிந்து வைத்திருக்கும் மகன்...
அண்ணனின் இரகசியங்கள்
எல்லாம் தெரிந்திருந்தும்
அப்பாவிடம் சொல்லிவிடாத
தங்கை...
தங்கை இன்னொரு வீடு செல்லும்
வரை, அவளைக் காக்கும்
மதுரை வீரனாய் அண்ணன்...
தன் வரவு
செலவு சோகங்களை சமையலறைக்குள்ளே
ஒளித்துவிட்டு, எப்போதும் சிரித்த
முகத்துடனே வரும் அம்மா...
உழைத்த
களைப்போடு வீடு வந்தபோதும்,
பிள்ளைகளின் முகத்தைக்
கண்டதும்
புத்துணர்ச்சி அடையும் அப்பா...
சேலை முந்தானையில் முடிஞ்ச
சில்லரைகளாலே பேரனின்
பொருளாதார
தேவைகளை தீர்த்துவைக்கும்
பாட்டி...
நாங்கலாம் அந்த
காலத்துலன்னு ஆரம்பிச்சி கதை சொல்லியே பேத்தியை தூங்க வைக்கும் தாத்தா...
வாழும் போதே சொர்க்கத்தை மண்ணில்
காட்டுவது பாசம் நிறைந்தக்
குடும்பம்...!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக