தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 1 மே, 2014

, நீர், கார்பன்- டை ஆக்சைடு மற்றும் சூரிய ஒளி மூலம் மண்ணெண்ணெய்!



ஜேர்மன் மற்றும் சர்வதேச ஆராய்ச்சியாளர்கள், நீர், கார்பன்- டை ஆக்சைடு மற்றும் சூரிய ஒளி மூலம் மண்ணெண்ணெய் தயாரிக்கும் முறையில் வெற்றி கண்டுள்ளனர்.
ஜேர்மன் விண்வெளி மையத்தில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் முற்றிலும் புதுப்பிக்கத்தக்க ஜெட் எரிபொருள் உற்பத்தி செய்ய முயற்சி எடுத்தனர்.
இதனை அடுத்து அவர்கள் நீர், கார்பன் டை ஆக்சைடு மற்றும் சூரிய ஒளி வைத்து மண்ணெண்ணெய் தயாரிக்க முடியும் என நிரூபித்துள்ளனர்.
மேலும் அராய்ச்சியாளர்கள் இந்த திட்டம் பாதுகாப்பானது என்றும், விமான எரிபொருள் மட்டுமின்று, டீசல், பெட்ரோல், அல்லது பிளாஸ்டிக் போன்றவற்றை தயாரிக்க முடியும் என தெரிவித்துள்ளனர்.
நான்கு வருடங்களாக திட்டமிட்ட இந்த ஆய்வில், SOLAR JET என பெயரிடப்பட்ட சூரிய ஒளியை பயன்படுத்தி உலோகத்தை கொதிக்க வைக்கப்படுகின்றனது, அந்த உலை 700°c வெப்பத்தை நெறுங்கிய பின் அதில் நீர் மற்றும் கார்பன் மோனோக்சைடு செலுத்தபடுகிறது, இதனால் அது ஹைட்ரஜன் மற்றும் கார்பன் மோனோ ஆக்சைடு எரிவாயுவாக மாறுகிறது.
பின்னர் இந்த எரிவாயுவை ஒரு ஷெல்லில் (SHELL) அழுத்தி அதனை வழக்கமான மண்ணெண்ணெய் போன்ற ஹைட்ரோகார்பன் எரிபொருளாக மாற்றுகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக