பொதுவாக நம் இந்து மத குருமார்கள் கீழ்காணும் "பேதங்களை" வைத்து தங்களின் கொள்கைகளுக்கு விளக்கள் அளித்துள்ளனர் அவை,
1,சஜாதிய பேதம்- ஒரே இனத்தில் இருக்கும் இருபொருட்களுக்குள்ள வேற்றுமை (ஆலமரத்துக்கும் அரசமரத்துக்கும் உள்ள வேற்றுமை போல).
2,விஜாதிய பேதம்- இரு வேறு இன பொருட்களுக்குள்ள வேற்றுமை. (மரத்துக்கும் பாறைக்கும் உள்ள வேற்றுமை போல).
3,ஸ்வகத பேதம்- ஒரே பொருட்களுக்குள் உள்ள வேற்றுமை. (ஒரு மரத்தின் இலைக்கும் கிளைக்கும் உள்ள வேற்றுமை போல).
அத்வைதம்(ஸ்ரீஆதிசங்கரர்)-
மேற்கண்ட பேதங்களை ஏற்ககவில்லை, ஞானமயமான இறைவன் மட்டுமே உண்மை மற்றவை கானல் நீர்போன்றது என்றார்.
விசிஷ்டாத்வைதம்(ஸ்ரீராமானு
சஜாதிய பேதம்- பரமாத்மாவும் ஜீவாத்மாவும் ஞானம் உள்ள இருசக்திகள்.
விஜாதிய பேதம்- பரமாத்மாவும் பிரமஞ்சமும் இரு வேறுசக்திகள்.
ஸ்வகத பேதம்- பரமாத்மா ஸ்ரீவைகுண்டத்திலும், பாற்க்கடலிலும் உள்ள ஒரே தன்மை சக்திகள்.
துவைதம்(ஸ்ரீமத்வர்)-
விஜாதிய பேதம்- பரமாத்மாவுமாவும் பிரபஞ்சமும் இருவேறு சக்திகள்.
ஸ்வகத பேதம்- பரமாத்மாவும் ஜீவாத்மாவும் ஒரே தன்மையின் சக்திகள்.
இந்த வேற்றுமைகள் மனிதனை பிரிப்பதற்க்கு அல்ல, ஜீவாத்மாவை பரமாத்மாவுடன் இணைப்பதற்க்கான வழிகள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக