* பூண்டைப் பாலில் காய்ச்சியும், ஊறுகாயாகவும், லேகியமாகவும் செய்து தொடர்ந்து சாப்பிட்டால் ஊளைச் சதை குறையும், உடல் எடையும் குறையும்.
* பூண்டை நசுக்கிய சாற்றுடன் கற்பூரத்தை கரைத்துப் பூச மூட்டு வலி குணமாகும். பூண்டு 50 கிராம், மிளகு 50 கிராம், ஓமம் 20 கிராம், சுக்கு 20 கிராம், எருக்கிலை சாறு 100 மி.லி. ஆமணக்கு நெய் ஒரு லிட்டர் சேர்த்துக் காய்ச்சி வடிக்கவும். இதனை மூட்டு வலி, வீக்கம், வாதம், நரம்பு வலிக்கும் பூசலாம்.
* பூண்டைப் பாலாவியில் வேக வைத்துக் கடைந்து கொள்ள வேண்டும். பனங்கருப்பட்டியும் தேனும், சுக்குத் தூளும் போட்டு இளகலாகச் செய்து வைத்துக் கொண்டு 10 கிராம் அளவு சாபிபிட வேண்டும். வயிற்று வலி, வாய்வுக் கோளாறு யாவும் குணமாகும். பூண்டை வதக்கி வற்றல் குழம்பு வைத்துச் சாப்பிட குளிர் தொல்லை நீங்கும்.
* இதன் சாற்றை காதில் சில துளிகள் விட காது வலி குணமாகும்.
* எந்த ரூபத்தில் பூண்டை உண்டாலும் கபத்தை வெளியேற்றும், மலத்தை இளக்கும். பூண்டுச் சாற்றில், சிறிது உப்பு கலந்து உடம்பில் எங்கேனும் சுளுக்கு ஏற்பட்ட இடத்தில் பூசினால் சுளுக்கு மறையும்.
* பூண்டுரசம் கபத்தை நீக்கும். குப்பைமேனி இலையுடன் பூண்டை வைத்து அரைத்துச் சாறு எடுத்து, இச்சாற்றை குழந்தைகளுக்கு கொடுக்க வயிற்றிலுள்ள பூச்சிகள் வெளியே வந்திடும். பூண்டு வசம்பு, ஓமம், இவைகளை சம அளவு எடுத்து இடித்து மூன்று நாட்கள் சாப்பிட மாந்த ஜன்னி குறையும்.
* பூண்டை நசுக்கி, சாறெடுத்து சாறை உள் நாக்கில் தடவ உள் நாக்கு வளர்ச்சி குறையும். பூண்டோடு சிறிது எலுமிச்சை சாறு விட்டு அரைத்து இரு வேளை சாப்பிடக் கீல்வாதம் குணமாகும்.
* பூண்டையும், சிறிது உப்பையும் சேர்த்துத் சாப்பிட்டால் திடீரென ஏற்படும் வயிற்று வலி, நெஞ்சு எரிச்சல், நெஞ்சுக் கரிப்பு குறையும்.
* வெள்ளைப் பூண்டு, வெற்றிலை இரண்டையும் அரைத்து தேமல் மீது பூசினால் மறைந்து விடும். அது போல் தொடை இடுக்கிலுள்ள கக்கூஸ் படை மீது தடவி வர அதுவும் குணமாகிவிடும்.
* பூண்டுடன் சிறிது ஓமத்தை நசுக்கிப்போட்டு கசாயம் வைத்துக் குழந்தைகளுக்குக் கொடுக்க குழந்தைகளின் வாந்தி, கொட்டாவி குறையும்.
* பூண்டைப் பொன்னாங்கண்ணிக் கீரையுடன் சேர்த்துச் சாப்பிட மூலநோய் நீங்கும்.
* ஒரு வெள்ளைப் பூண்டு, ஏழு மிளகு, ஒன்பது மிளகாய் இலை-இவைகளைச் சேர்த்து அரைத்து காலை, மாலை சாப்பிட்டால் குளிர் காச்சல் போய்விடும். பூண்டுச் சாற்றையும், இஞ்சிச் சாற்றையும் சம அளவு கலந்து காலை, மாலை மூன்று நாட்கள் சாப்பிட நெஞ்சுக் குத்து நீங்கும்.
* பூண்டைப் பொடி செய்து தேனில் குழைத்து தலை, புருவத்தில்-பூச்சிவெட்டு முடிவளராமல் இருக்குமிடத்தில் தேய்த்து வர முடி வளரும். பூண்டைப் பச்சையாகச் சாப்பிட்டால் வாத நோய் குணமாகும்.
* அரைக்கீரையோடு பூண்டு, சீரகம், பச்சை மிளகாய்ச் சேர்த்து புளி சேர்க்காமல் சமைத்துச் சாப்பிட வாயுத் தொல்லை நீங்கும்.
*பூண்டு, மிளகு, கரிசலாங்கண்ணிக் கீரை மூன்றையும் அரைத்துக் காலையில் மட்டும் மூன்று நாட்கள் நெல்லிக்காய் அளவு சாப்பிட சோகை நோய் குணமாகும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக