தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 13 ஏப்ரல், 2014

காதல் பிரிந்த பின் ஒரு நாள் அலைபேசியில்...!!!


பதட்டம் இல்லாத குரலில் அவள், என்ன சொல்ல போகிறாள் என்ற கலக்கத்துடன் மறுமுனை அவன்...!

அவன்: நீ எப்படி இருக்கிற...?

அவள்: நான் ரொம்ப சந்தோஷமா இருக்குறேன், நீ என்னை பிரிஞ்சா பிறகும் எனக்கு ஒண்ணும் வலிக்கல்ல, எனக்கு கண்ணீர் ஒண்ணும் வரல்ல, நீ சொன்ன மாரி நான் எப்பவும் சிரிச்சுகிட்டு தான் இருக்குறேன். நீ என்ன நெனச்சு கஷ்ட்டபடாத, இப்போ எல்லாம் உன் நெனப்பு அதிகமா இல்ல, உன்ன மறந்துட்டேன்னு நினைக்குறேன், நீ இத எல்லாம் நினச்சு குடிச்சு உடம்ப கெடுத்துக்காத...
நீ எப்பவும் சிரிச்சுகிட்டு இரு என்ன..? உன் முகம் சிரிச்சா ரொம்ப நல்லா இருக்கும்...!
சரி சரி அம்மா வந்துட்டாங்க நான் அப்புறம் பேசுறேன்...!

பெண்கள் கண்ணீரின் மறு பெயர் அம்மா என்று யார் மாற்றி வைத்ததோ...!!!

புன்னகை வார்த்தையில் சிதற விட்டவள் கண்களில் ஏனோ கண்ணீர்!!!
கண்களில் வந்த கண்ணீர் அவள் இதயம் நனைத்து குரலை கலைத்து அவன் மனதிற்க்கு வேதனை தரும் முன் பொய்யால் அலைபேசியை துண்டித்து குமுறி குமுறி சத்தம் கேட்க கூடாதென போர்வையை வாயினுள் வைத்து அழுகிறாள்!!!
அம்மாவிடம் சொல்லி அழவும் வழி இல்லை, சோகங்கள் சொல்லி அழ அருகில் தோழியும் இல்லை!!!
அவனை நினைத்து தன் மனதில் கதறி அழும் குரல் கேட்க அவனும் அருகில் இல்லை!!!

பிரிவை தாங்காத இவள் சாகவும் அஞ்சவில்லை...!அனைத்து வலிகளையும் மனதில் புதைத்து பொய்யான புன்னகையுடன் உலா வரும் இவள் என்றும் உங்கள்https://www.facebook.com/Sk.kobi

நண்பர்களே தெரியாமலும் உங்களின் அன்பானவர்களை திட்டி விடாதீர்கள்!!!சில நேரங்களில் உங்களுக்காகவே சில வேதனைகளை தாங்கி கொண்டு உங்களின் சிரிப்பில் தங்களின் ஒவ்வொரு நிமிடத்தையும் கடப்பவர்கள் ஏராளம்...!
உங்கள் காதல் நிலா மேல் என்றால் உங்களின் அன்பானவரின் காதல் "வானம்" உங்கள் மேல் தான்...!!!

பிரிந்த பின் வருந்தி நிற்க்காமல் புரிந்து வாழ்வதே காதல்...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக