தொலைக்காட்சி!!

Search This Blog

Thursday, April 6, 2017

எந்த ஜாதககாரர்களுக்கு பணப்புழக்கம் அதிகமாக இருக்கும்?

அன்றாட வாழ்வியல் தேவைக்கு, பணம் அத்தியாவசிய தேவையாகிவிட்டது. இப்படிப்பட்ட பணம் தாராளமாகக் கிடைக்க ஒருவரது ஜாதகத்தில் என்ன வகையான யோகம் இருக்க வேண்டும்?
திடீரென்று ஏதாவது மாயஜாலம் போல் சிலருக்கு பணம் கொட்டும். அப்படி ஒருவருக்கு பணம் கிடைக்க என்ன மாதிரியான யோகம் இருக்க வேண்டும்? என்பது குறித்து பார்ப்போம்,
ஜோதிட ரீதியாக தனக்காரகன் எனப்படும் குரு பகவான், ஒருவரது ஜாதகத்தில் சாதகமான இடத்தில் இருந்தால்தான் ஏற்றமும், உயர்வும் உண்டாகும். லக்னத்துக்கு 2 - ம் இடத்தைத்தான், தனம், குடும்பம், வாக்கு ஸ்தானம் என்று சொல்வார்கள். தனக்காரகனான குரு வலுப்பெற்று இருந்தால் எல்லா வகையிலும் ஏற்றம் உண்டாகும்.
ஜாதகத்தில் இந்த 2 - ம் இடம் சிறப்பாக இருக்க வேண்டும். 2-ம் இடத்துக்கு அதிபதி ஆட்சி உச்சம் பெற்று இருக்க வேண்டும். இந்த இடத்துக்கு குருவின் பார்வை இருப்பது அவசியம்.
2 ம் இடத்துக்கு அதிபதி 1,4, 7, 10 ஆகிய கேந்திர ஸ்தானத்தில் அமையப் பெற்றால், ஜாதகர் செல்வம் மிக்கவராகவும் செல்வாக்கு மிக்கவராகவும் இருப்பார். தனஸ்தானாதிபதி 6, 8, 12 - ம் இடங்களில் மறையாமலும், நீசம் அடையாமலும் இருந்தால் பணவரவு சரளமாக இருக்கும்.
குரு 6, 8, 12 - ம் இடங்களில் மறைந்தாலோ, நீசம் அடைந்தாலோ பொருளாதார ரீதியாக பல்வேறு சங்கடங்களை ஜாதகர் சந்திக்க நேரிடும்.
தனஸ்தானாதிபதி (2 மிடத்து அதிபதி) அல்லது குரு பகவான் பாதக ஸ்தானங்களில் அமையப்பெற்றாலோ நீசம் அடைந்தாலோ, எவ்வளவு பணம் வந்தாலும், வீண்செலவாகவே அவை விரையமாகிவிடும். செலவுகள் கட்டுக்குள் இல்லாத சூழ்நிலை, சேமிப்பு இல்லாத சூழ்நிலை ஏற்படும்.
தனக்காரகன் குருவும், தனஸ்தானதிபதியும் நான்காம் வீட்டு அதிபதியுடன் தொடர்பு பெற்று வலுப்பெற்று இருந்தால், அசையாச் சொத்துக்கள் வந்து சேரும். அமைப்பு ஏற்படும்.
திடீர் பணம் வரும் யோகம் யாருக்கு?
ஜாதகத்தில், 3,6,10 மற்றும் 11 - மிடங்கள் வலுவாக இருப்பவர்களுக்கு, நேர் வழியிலோ, குறுக்கு வழியிலோ ஏன் ஜாதகரே எதிர்பாராதவிதமாக திடீர் பண வரவு ஏற்படும்.
ஒருவருடைய ஜாதகத்தில் 8 - ம் இடமும் 12 -ம் இடமும் மறைவுஸ்தானமாக இருந்தாலும், 3,6, 8 மற்றும் 12 - ம் இடத்தின் அதிபதிகள் பரிவர்த்தனை பெற்றிருந்தால், விபரீத ராஜயோக அமைப்பு ஏற்பட்டு அவர்களது வாழ்வில் பணம் கொட்டோ கொட்டென்று கொட்டும்.
- Vikatan

No comments:

Post a Comment