தொலைக்காட்சி!!

Search This Blog

Wednesday, April 19, 2017

ஒவ்வொரு ராசியின் தீய குணாதிசயங்கள்: மாற்றிக் கொண்டால் அதிர்ஷ்டம் தான்

சில நேரங்களில் நாம் தேவையின்றி வெளிப்படுத்தும், கோபம், பேராசை, சுயநலம் போன்றவை தீய குணாதிசயங்களாக கருதப்படுகிறது.
அந்த வகையில் ஒவ்வொரு ராசிக்கும் தீய குணாதிசயங்கள் எப்படி இருக்கும் என்பதை பற்றி ஜோதிடம் கூறுவதை பார்க்கலாம்.
மேஷம்
மேஷம் ராசி உள்ளவர்களுக்கு மிருகத்தனமான கோபம் இருக்கும். பிடிக்காத நிகழ்வுகள், சம்பவங்கள் நடந்துக் கொண்டிருக்கும் போது, அமைதியாக இருப்பது போன்ற முகபாவம் இருக்கும். ஆனால் உள்ளுக்குள் கோபக் கனலுடன் குமுறிக் கொண்டிருப்பார்கள்.
ரிஷபம்
பிடிவாதம், பேராசை போன்றவை ரிஷப ராசிக்காரர்கள் மத்தியில் இருக்கும். ஆனால் அது ஒரு பொருள் அல்லது நபரின் மீது அதீத பற்றுக் கொள்வது மற்றவர்கள் உங்களை வேறு கண்ணோட்டத்தில் பார்க்க காரணியாக இருக்கிறது.
மிதுனம்
சூழ்நிலைக்கு மற்றும் ஆர்வத்திற்கு ஏற்ப மாறிக் கொண்டே இருப்பது. இவர்களின் குணமாகும். ஆனால் அது மற்றவர்களுடைய உறவில் உணர்ச்சி ரீதியான பாதிப்பை ஏற்படுத்தும்.
கடகம்
நுண்ணிய உணர்வு நிலை, அதாவது சட்டென்று இவர்களது உணர்ச்சி நிலை மாறி அதிகரித்துவிடும். மகிழ்ச்சி, கோபம், அழுகை என்று எதுவாக இருப்பினும், உடனடியாக அதிகப்படியாக வெளிப்படுத்திவிடுவர்கள்.
சிம்மம்
நண்பர்கள் கூட்டத்தில் ஆதிக்கம் செலுத்த வேண்டும். நான் தான் சிறந்து விளங்க வேண்டும் என்ற பேராசை போன்ற உணர்வுகளை கொண்டவர்களாக இருப்பார்கள். அது அவர்களின் நண்பர்கள் மத்தியில் உள்ள உறவை பாதிக்கும்.
கன்னி
தாழ்வு மனப்பான்மை தான் கன்னி ராசிக்காரர்களின் கெட்ட குணாதிசயம். இது இவர்களின் வளர்ச்சியை, உறவுகளை, உற்பத்தி திறனை வெகுவாக பாதிக்கச் செய்யும்.
துலாம்
தயக்கம், மற்றவர்கள் என்ன நினைப்பார்கள், இதை செய்யலாமா? வேண்டாமா? என்று மற்றவர்களின் கருத்தினை நினைத்து தயக்கம் கொள்வது தான் துலாம் ராசிக்காரர்களின் தீய குணாதிசயமாகும்.
விருச்சிகம்
இவர்கள் ரகசியமாகவே இருப்பது, அச்சுறுத்தும் வகையில் நடந்துக் கொள்வது, ஆக்ரோஷமாக செயல்படுவது போன்றவை விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு உள்ள குணமாகும். இது அவர்களின் நெருக்கமான உறவில் விரிசலை ஏற்படுத்தும்.
தனுசு
கலாச்சாரம், ஆன்மீகம், அமைதி என்று தனிமையில் இனிமை காணும் நபர்களாக தனுசு ராசிக்காரர்கள் திகழ்வார்கள். இது இவர்களது பொதுவான குணாதிசயங்களில் ஒன்று. இதனால் இவர்களை சுற்றியுள்ளவர்கள் மிகவும் குறைவாக இருப்பார்கள்.
மகரம்
தொழில், படிப்பு, வேலை என்று அனைத்திலும் போட்டி மனப்பான்மையுடன் வாழ்பவர்கள். லட்சிய பயணம் என்ற பெயரில் இவர்கள் தங்களை சுற்றி இருக்கும் நண்பர்கள், உறவினர்களை மறந்துவிடுவது இவர்களின் தீய குணமாகும்.
கும்பம்
இந்த ராசிக்காரர்கள் அனைத்து செயல்பாடுகளிலும் தனித்தே ஈடுபடுவார்கள். இதனால் இவர்களை சுற்றி மற்றவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருக்கும்.
மீனம்
மீனம் ராசி உள்ளவர்கள் சுதந்திரமாக எதையும் யோசிக்க மாட்டார்கள். இதனால் இவர்களின் வாழ்க்கையில் உறுதியற்ற மற்றும் சந்தர்ப்பவாத மனோபாவம் பேரழிவை உண்டாக்கும்.
http://news.lankasri.com/astrology/03/123600?ref=lankasritop

No comments:

Post a Comment