தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 10 நவம்பர், 2014

உலகை கலக்க வருகிறது மைக்ரோசொப்டின் முதலாவது லூமிய!

மைக்ரோசொப்ட் நிறுவனத்தினால் முதன் முறையாக உருவாக்கப்பட்ட லூமிய ஸ்மார்ட் கைப்பேசி நாளைய தினம் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக உத்தியோகபூர்வ அறிவித்தல் வெளியாகியுள்ளது.
இக்கைப்பேசியானது முற்றுமுழுதாக Microsoft Lumia பிராண்டின் கீழ் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதன் வியாபாரக் குறியீட்டு இலக்கம் RM-1090 என குறிப்பிடப்பட்டுள்ளதுடன் Nokia Lumia 530 ஸ்மார்ட் கைப்பேசிக்கு பிரதியீடாக இது அறிமுகம் செய்யப்படுகின்றது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இக்கைப்பேசியின் சிறப்பம்சங்கள் உட்பட ஏனைய தகவல்கள் இதுவரையில் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக