தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 9 நவம்பர், 2014

பெர்லின் மதில் வீழ்ந்து 25வருடங்கள் முடிந்த நாள் இன்று!!


பெர்லின் மதில் வீழ்ந்து 25வருடங்கள் முடிந்த நாள் இன்று!!ஒன்றுபட்டGermany இன் 25வருடங்கள் நிறைவுக்கான வாழ்த்துக்கள்!!
இந்நாளில் இருந்து உங்கள் அறிவுக்கண் திறக்கட்டும்,அடிமை மோகம் ஒழியட்டும்,அகதிகளின் உண்மைத் துயர் விளங்கட்டும் !
25 Years Fall of the Wall
25 Years Fall of the Berlin Wall - an overview!
http://www.visitberlin.de/…/25-years-fall-of-the-berlin-wall

பெர்லின் சுவர் இடிக்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவு: கோலாகல கொண்டாட்டம் (வீடியோ இணைப்பு)
[ ஞாயிற்றுக்கிழமை, 09 நவம்பர் 2014, 10:32.02 மு.ப GMT ]
ஜேர்மனியில் உள்ள பெர்லின் சுவர் இடிக்கப்பட்டதன் 25–வது ஆண்டு நிறைவு விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டுள்ளது.
ஜேர்மனி நாடு கடந்த 1961–ம் ஆண்டு 2 ஆக பிரிந்து, கிழக்கு ஜேர்மனி என்றும் மேற்கு ஜெர்மனி என்றும் ஆனது.
இந்நிலையில், அப்போது கிழக்கு ஜேர்மனியில் இருந்து மேற்கு ஜேர்மனிக்கு ஏராளமான மக்கள் புலம் பெயர்ந்துள்ளனர்.
அவர்களை தடுத்து நிறுத்த பெர்லின் நகரின் குறுக்கே 155 கி.மீ. தூரத்துக்கு கிழக்கு ஜேர்மனி அரசு சுவர் ஒன்றை கட்டியது.
அதனால் இருநாடுகளை சேர்ந்த மக்கள் தங்கள் உறவுகளையும், சொந்தங்களையும் சந்திக்க முடியாமல் தவித்தனர்.
பின்னர் இரு நாடுகளுக்கும் இடையேயான பனிப்போர் விலகியதைத் தொடர்ந்து 1989–ம் ஆண்டில் 2 ஜேர்மனியும் ஒருங்கிணைந்தது. இதனால் பெர்லின் சுவர் இடித்து வீழ்த்தப்பட்டது.
155 கி.மீட்டர் நீளம் இருந்த அந்த சுவர் தற்போது 3 கி.மீட்டர் மட்டுமே இடிக்கப்படாமல் அப்படியே நினைவு சின்னமாக திகழ்கிறது.
பெர்லின் சுவர் இடிக்கப்பட்ட 25–வது ஆண்டு நிறைவு விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டபோது சுவர் இடிந்து மறைந்ததன் அடையாளமாக அங்கு 15 கி.மீ தூரத்துக்கு 7 ஆயிரம் வெள்ளை பலூன்கள் நடப்பட்டு இருந்தன.
http://newsonews.com/view.php?24AMec03dOSde2ZnBab2q0Med2Q8E0c3BB5243AlR2236AI3

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக