வீட்டில் சந்தோஷம் கொண்டிருக்கும் தீபாவளி திருநாளில், விருந்தினர் வீட்டிற்கு செல்லும் போது வெறும் பட்டாசுகளை மட்டும் வாங்கி பரிசாக கொடுக்காமல், சற்று வித்தியாசமாக அவர்கள் மறக்க முடியாதவாறு வீட்டு உபயோகப் பொருட்களாக எதையாவது பரிசளிக்கலாம்.
அப்படி என்னென்ன பொருட்களை வாங்கிகொடுக்கலாம் என்று பார்க்கலாம் வாருங்கள்,
சில்வர் விளக்கு
இந்த சில்வர் விளக்கானது டேபிளின் நடுவே வைத்தால் அழகாக இருக்கும். உங்கள் நண்பர் வீட்டில் டேபிள் அல்லது ஷோ கேஸ் இருந்தால், இதனை வாங்கிக் கொடுங்கள்.
ரதத்தில் விநாயகர்
உங்கள் மனம் கவர்ந்தவருக்கு விநாயகர் பிடிக்குமானால், ரதத்தில் இருக்குமாறான விநாயகரை பரிசாகக் கொடுக்கலாம்.
வீட்டு அழகுப் பொருள்
வீட்டு அழகுப்பொருட்கள் ஏதாவது வாங்கி தர ஆசைப்பட்டால், டைனிங் டேபிளை அழகுபடுத்தும் அழகு சாதன பொருட்களை பரிசளியுங்கள்.
வெண்கல நகைப்பெட்டி
உங்கள் காதலி அல்லது மனைவிக்கு வெண்கல நிறம் கொண்ட நகைப்பெட்டியை பரிசாகக் கொடுக்கலாம்.
ராமர் சீதை சிலைகள்
உங்கள் நண்பருக்கு கடவுள் மீது அதிக நம்பிக்கையெனில், ராமர், சீதை, லட்சுமணர் மற்றும் அனுமன் இருக்கும் இந்த சிலையை வாங்கிக் கொடுங்கள்.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக