சுவிட்சர்லாந்தில் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினம் அறிந்து கர்ப்பத்தை கலைக்க கூடாது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
சுவிஸில் குழந்தையின் பாலினம் அறிந்து கர்ப்பத்தை கலைக்க கூடாது என்ற சட்டம் இருந்து வந்தாலும், அதனை பல பெற்றோர்களும், மருத்துவமனைகளும் மீறி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பெற்றோர்கள் பலர் அல்ட்ரா சவுண்ட் முறை மூலம் குழந்தையின் பாலினத்தை அறிந்து 9வது வாரத்திலேயே கர்ப்பத்தை கலைத்து விடுகின்றனர்.
குழந்தைக்கு பாதிப்பு இருந்தால் மட்டுமே பெற்றொர்களிடம் பாலினத்தை கூற வேண்டும் என்ற சட்டத்தை மருத்துவர்கள் மீறுவதாகவும் தெரியவந்துள்ளது.
பல பெற்றோர்கள் சோதனைக்கான பொருட்களை வாங்கி வீட்டிலேயே குழந்தையின் பாலினத்தை தெரிந்து கொள்கிறார்கள் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் சுவிஸில் கர்ப்பத்தை கலைக்கும் விகிதம் வெறும் 6 சதவிகிதம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக