தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 16 அக்டோபர், 2014

வியப்பில் ஆழ்த்தும் ஆழப்புழா கடற்கரை (வீடியோ இணைப்பு) !


ஆலப்புழா கடற்கரை ஒரு பிரசித்திபெற்ற சுற்றுலாத்தலமாக உள்ளது.
கிழக்கு வெனிஸ் என்று அழைக்கப்படுகின்ற ஆலப்புழா கேரள வரலாற்றில் ஒரு சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளது.
அங்கு நடைபெறும் படகுப்போட்டிகள், விடுமுறை காயல் வீடுகள், கடற்கரைகள், கடல் உற்பத்திப் பொருட்கள் மற்றும் தேங்காய் நார்தொழிற்சாலைகள் ஆகியவற்றிற்குப் புகழ்பெற்ற இடமாக உள்ளது.
கடல் வரை பரந்து காணப்படும் இங்குள்ள கப்பல் துறை 137 வருட பழைமை வாய்ந்தது. விஜயா கடற்கரை பூங்காவிலுள்ள பொழுதுபோக்குவசதிகள் இந்த கடற்கரைக்கு மேலும் அழகுகூட்டுவனவாக உள்ளன.
அருகில் உள்ள ஒரு பழைமையான கலங்கரை விளக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கு மகிழ்ச்சியைக் கொடுப்பனவாக உள்ளன.
ஆலப்புழாவில் இருக்கும்போது நாம் காணும் மிகவும் அருமையான ஒரு அனுபவம் படகு இல்லப் பயணமாகும்.
நாம் ஆலப்புழாவிலுள்ள காயல்களில் பழையகாலத்து கட்டுவள்ளங்களின் மறுபதிப்புகளைக் காணலாம்.
அசலான கட்டுவள்ளம் அல்லது அரிசி தோணிகள் டன் கணக்கான அரிசி மற்றும் நறுமணப் பொருட்களைக் கொண்டு செல்லப் பயன்படுவதுவழக்கம். கட்டுவள்ளம் அல்லது முடிச்சோடு கூடிய படகு என இது அழைக்கப்படுகிறது.
ஏனெனில் இது முழு படகும் கயிற்றினால் மட்டுமே கட்டப்பட்டு ஒரு படகாக உருவாக்கப்பட்டிருக்கும்.
பின்னர் ஒரு ஹொட்டல் போன்று நன்றாக அலங்கரிக்கப்பட்ட படுக்கை அறைகள், நவீன கழிப்பறைகள், ஆடம்பர வரவேற்பறைகள், சமையலறை மற்றும் அனைத்து பக்கங்களையும் பார்ப்பதற்கு ஏற்ற பால்கனி என அனைத்து வசதிகளையும் கொண்டது.
ஒருவர் படகு இல்லத்தில் இருக்கும்போது காயல் வாழ்க்கை நிகழ்வுகளை எந்தவிதமான இடையூறும் இல்லாமல் கண்டு மகிழலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக