விஷம் என்றாலே பலருக்கும் பாம்பு தான் ஞாபகம் வரும், ஆனால் பாம்புகளை விட அபாயகரமான மற்றும் உடனடியாக உயிரை பறிக்கும் விஷத்தன்மை கொண்ட இயற்கையான தாவரங்கள், உயிரினங்கள், இரசாயனங்கள் இருக்கின்றன.
ரிசின் (Ricin)
இது கிட்டத்தட்ட ஆந்த்ராக்ஸ் போல தான் என்றாலும் அதைவிட விரைவாக மரணத்தை ஏற்படுத்த கூடியது. இதை நுகர்ந்து பார்த்தாலே மரணித்துவிடுவார்கள்.தவளை (he Golden Poison Dart Frog)
தி கோல்டன் பாய்சன் டார்ட் ஃப்ராக் என அழைக்கப்படும் இந்த தவளையானது மிக சிறியதாக இருந்தாலும், அதன் விஷம் பத்து மனிதர்களை கொல்லும் அளவுக்கு வீரியம் கொண்டது.சரின் வாயு (Sarin Gas)
1995ல் இந்த வாயுவை தீவிரவாதிகள் இராணுவத்திடம் சிக்கிக் கொள்ளும் போது பயன்படுத்தி வந்தனர். இது இதயத்தை இறுக்கமாக்கி, மிகவும் இறுக்கி கடைசியில் உட்கொண்ட நபர் இறந்த பிறகே இலகுவாக்கும்.பஃபர் மீன் (Puffer Fish)
பஃபர் வகை மீன்களின் உடல் பாகங்களில் Tetrodotoxin நச்சு இருக்கிறது. இந்த மீன்களால் மட்டும் வருடத்திற்கு ஜப்பானில் ஐந்து பேர் உயிரிழக்கிறார்கள்.சயனைடு
சயனைடு என்பது ஒரு வர்ணமற்ற கேஸ் அல்லது கிறிஸ்டல் ஆகும். இதை நுகர்ந்தால் இதய துடிப்பு குறையும், மூச்சு திணறல் ஏற்படும். பின்னர் உடலில் இருக்கும் ஆக்சிஜன் செல்களை இழக்க செய்து மரணத்தை உண்டாக்கும்.பீச் ஆப்பிள் மரம்
இவ்வகையான மரம் வட அமெரிக்காவின் பளோரிடாவில் அதிகம் காணப்படுகிறது. இந்த மரத்தில் பச்சை நிறத்தில் பழங்கள் கிடைக்கின்றன. இனிப்பானவையாக இருப்பினும் இதை சாப்பிடக் கூடாது.அகோனைட் (Aconite)
இது ஒரு நச்சு செடிவகையாகும், நீலம் அல்லது மஞ்சள் நிறத்தில் இருக்கும் இச்செடிகளை ஒருசில தசாப்தங்களுக்கு முன்னர் வரை இதை ஒரு ஆட்கொல்லி ஆயுதமாக பயன்படுத்தி வந்துள்ளனர்.பெல்லடோனா (Belladonna)
பெல்லடோனா என்பது மிகவும் விஷத்தன்மை கொண்ட மலராகும். இதன் அனைத்து பாகங்களும் விஷத்தன்மை கொண்டுள்ளதால் மலரை உட்கொள்பவர்கள் உடனடியாக மரணம் அடைவார்கள்.http://news.lankasri.com/natural/03/135984
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக