தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 4 நவம்பர், 2017

உலகளாவிய ரீதியில் சாதனை படைத்த 11 வயது சிறுமி Gitanjali Rao !


அமெரிக்காவின் சிறந்த இளம் விஞ்ஞானியாக 11 வயதுடைய சிறுமி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
2017 ஆம் ஆண்டிற்கான Discovery Education 3M விஞ்ஞானி சவால் போட்டியில் முதல் பரிசை அவர் வென்றுள்ளார்.
அமெரிக்காவின் Lone Tree, Colorado பகுதியை சேர்ந்த Gitanjali Rao என்ற சிறுமியே இந்த பரிசை வென்றுள்ளார்.
தண்ணீரில் காரீயம் (lead) கலந்திருப்பதைக் கண்டறிய அவர் உருவாக்கியுள்ள புதிய கருவியான டெத்ஸிற்காக (Tethys) இந்த விருதை அவர் வென்றுள்ளார்.






அமெரிக்காவிலுள்ள 5 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்கள் கலந்துகொண்ட இந்தப் போட்டியை, 3M நிறுவனம் நடத்தியது. நாளாந்த பிரச்னைகளுக்கான அறிவியல் பூர்வமான தீர்வுகளை மாணவர்கள் இப்போட்டியில் முன்வைக்க வேண்டும் என அறிக்கப்பட்டது.
அதற்கமைய 25,000 அமெரிக்க டொலர் பரிசு தொகையும், அமெரிக்காவின் சிறந்த இளம் விஞ்ஞானி எனும் விருதும் இந்த போட்டியில் உள்ளடக்கப்பட்டது.

இதில், Gitanjali என்ற சிறுமிக்கு முதற்பரிசு கிடைத்துள்ளதுள்ளதுடன் அமெரிக்காவின் சிறந்த இளம் விஞ்ஞானியாகவும் தெரிவாகியுள்ளார்.
நீரில் கலந்துள்ள காரீயத்தின் அளவைக் கண்டறிந்து, புளூடூத் மூலம் கையடக்க தொலைபேசி தகவல் அனுப்பக்கூடிய கருவியை அவர் நிர்மாணித்துள்ளார்.
“தண்ணீரில் பிரதான காரீயம் கலக்கப்படுவதால் பாதிக்கப்பட்ட மக்களை கண்டேன். அதிர்ச்சியாக இருந்தது. யாராவது காரீயம் கலந்த நீரை பருகினால் பல பாதிப்புகள் ஏற்படும். சிறுவர்களுக்கு குறைப்பாடுகள் ஏற்படும்.
அதற்காகவே இந்த கருவியை உருவாக்கினேன். பல முறை இதனை உருவாக்கும் முயற்சியில் தோல்வியடைந்தேன். எனினும் அந்த தோல்வியில் கற்றுக் கொண்ட விடயங்கள் ஊடாக வெற்றியை பெற்றேன். இதனால் பலர் பயனடைவார்கள் என எதிர்பார்க்கிறேன்” என இளம் விஞ்ஞானி Gitanjali சர்வதேச ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.




http://news.lankasri.com/education/03/135994

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக