தொலைக்காட்சி!!

Search This Blog

Friday, November 24, 2017

புராணக் கதைகளில் நம்மோடு போட்டி போடுபவர்கள் கிரேக்கர்களே!


உலக அளவில் பூமிக்கு "ஜியா" என்று பெயர்.
அதிலிருந்து தான் "ஜியாக்ரஃபி" வந்தது.

கிரேக்க புராணத்தில் வருகிறாள் ஜியா.
அவளுக்கு இரு கணவர்கள்.கடலரசன் போன்ட்டஸ் மற்றும் விண்ணுக்கு அதிபதியான யுரேனஸ்.
போன்ட்டஸுக்கு ஜியா மூலம் ஐந்து குழந்தைகள் பிறக்கின்றன.யுரேனசுக்கு ஏராளமான குழந்தங்கள் உண்டு.(கௌரவர்களை போல)
யுரேனஸ் கொடுங்கோல் ஆட்சி நடத்தியதால் கணவனுக்கு எதிராக மகன்களை தூண்டி விடுகிறாள் ஜியா.
யுரேனசின் கடைசி மகன் க்ரோனஸ் தலைமையில் நடந்த போரில் மகன் தந்தைக்கு எதிராக வெற்றி பெறுகிறான்.
தன் தங்கை ரியாவையே மணந்து கொண்டு விண்ணுக்கு அதிபதியாகிறான்.தந்தையைக் கொன்றதால் பதிலுக்கு உன் மகன் உன்னை அழிப்பான் என்கிற சாபம் க்ரோனசுக்கு வருகிறது.
ரியாவுக்கு குழந்தைகள் பிறக்க பிறக்க (சாபத்திற்கு பயந்து)தன் சொந்தக் குழந்தைகளையே சமைத்து தின்று விடுகிறான் க்ரோனஸ்.
பொறுக்க முடியாத ரியா ஒருமுறை குழந்தை மாதிரியே ஒரு பொம்மையை துணியில் சுற்றி கணவனுக்கு கொடுக்க ஒரே ஒரு குழந்தை தப்பிக்கிறது.
(கிருஷ்ண பகவான் மாதிரி).
அந்த குழந்தை தான் ஜூபிடர்.
பிற்பாடு ஜூபிடர் தன் தந்தை க்ரோனஸ் மற்றும் எதிர் அணி சகோதர்களை தோற்கடித்து நாடு கடத்தி ஒருவனை மட்டும் உலகை சுமந்து கொண்டு இரு என்ற தண்டனையை விதிக்கிறார்.
அந்த ஒருவன் தான் அட்லஸ் !
புராணக் கதைகளில் நம்மோடு செமத்தியாக போட்டி போடுபவர்கள் கிரேக்கர்களே!

No comments:

Post a Comment