சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது ஆகிய நவக்கிரகங்களில் சுக்ரன் எனப்படும் அசுர குரு, நமது சுய ஜாதகத்தில் பலம் பெற்றிருந்தால் கலைத் துறையில் ஈடுபடும் யோகம் கிடைக்கும்.
அதுவும் ரிஷபம் மற்றும் துலாம் ராசிக்காரர்களுக்கு ராசிநாதனாக சுக்ரனே உள்ளார். அதனால் இவர்களுக்கு கலைத்துறை யோகம் கிடைக்க வாய்ப்புள்ளது.
ஒருவரின் ஜாதகத்தில் சுக்ரன் லக்னாதிபதியாகவும், தொழில் ஸ்தானாதிபதியாகவும் பலம் பெற்றிருந்தாலும், சந்திரன் அல்லது சுக்ரன் அம்சத்தில் பலம் பெற்றிருந்தாலும், கலைஞன் என்று வர்ணிக்கப்படும்.
சுக்ரனின் ஆதிக்கத் திகதியில் பிறந்தவர்களாக இருந்து, தங்கள் பெயரையும் சுக்ரனின் ஆதிக்கத்தில் அமைத்துக் கொண்டவர்கள், சுய ஜாதகத்திலும் தொழில் ஸ்தானத்தில் சுக்ரன் பார்வை பதிந்து இருக்கும்.
இவ்வாறான ஜாதக அமைப்பினை கொண்டவர்களுக்கு கலைத்துறை, வானொலி, தொலைக்காட்சி நிலையங்களில் பணிபுரிந்து நிரந்தரப் புகழுக்குச் சொந்தக்காரர்களாக விளங்கும் யோகம் உண்டாகும்.
http://www.manithan.com/astrology/04/150125
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக