தொலைக்காட்சி!!

Search This Blog

Thursday, November 2, 2017

நரிக்குறவர்கள் !!


நரிக்குறவர்கள் மராட்டிய வழி வந்தவர்கள் என்றும், மராட்டிய சிவாஜியின் படைவீரர்கள் என்றும் சொல்லுவதுண்டு. நரிக்குறவர் இந்திய ஆரிய மொழிச் சமூகத்தினர். சிவாஜியின் படைவீரர்களாக இருந்தனர். சிவாஜிக்கும் முகலாயர்களுக்கும் இடையே ஏற்பட்ட போரில் சிவாஜியின் படை தோற்றதால், சிவாஜியின் படைவீரர்கள் முகலாயர்களின் அடிமைகளாகவும் அவர்களுக்குப் பணிவிடை செய்யும் பணியாளர்களாகவும் முகலாயர்களால் பணிக்கப்பட்டனர். 100-150 ஆண்டு காலம் இவ்வாறு கொடுமைப்படுத்தப்பட்ட அவர்கள் முகலாயர்களிடம் இருந்து தப்பிக்க, நாட்டு வாழ்க்கையைக் கைவிட்டு காட்டில் புகுந்தர். வட இந்தியாவில் முகலாயர் ஆதிக்கம் மிகுந்திருந்ததால், தென்னிந்தியாவிற்கு குடிவந்தனர். இவர்களின் பெரும்பாலான சடங்குகள் இந்துக்களை ஒத்து இருந்தாலும் சில முஸ்லீம்களை ஒத்து இருக்கின்றன.
இவர்கள் மகாராஷ்டிரா, குஜராத், மேவார் போன்ற வட மாநிலங்களில் இருந்து புலம் பெயர்ந்தோர். கி.பி. ஆறு அல்லது ஏழாம் நூற்றாண்டுகளில் இவர்கள் தமிழகத்தில் குடியேறியிருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. குஜராத்தி, மேவாடோ, டாபி, சேளியோ, ஜோகண் என்று ஐந்து பிரிவுகள் உள்ளன. [2]
மேலும் இவர்கள் லம்பாடி இனத்தை சார்ந்தவர்கள் என்றும் சொல்வபவர்களுமுண்டு.
• உழைக்கமுடியாத நரிக்குறவ முதியோர்களை குடிசையிலேயே தங்க வைத்து பராமரிப்பது மகனின் கட்டாயக் கடமை.
• முதியோர்கள் முக்கியத்துவம் பெறுகின்றனர். முதியோர்கள் வகுக்கும் கட்டுப்பாட்டை இவர்களில் படித்தோர் உட்பட அனைவரும் ஏற்கின்றனர்.
• திருமணத்தில் ஆண்களே பெண்கள் குடும்பத்திற்கு பரிசப்பணம் தரவேண்டும்
• நரிக்குறவர்கள் வேற்று சமூகப் பெண்களைக் கிண்டல் கேலி செய்வதில்லை
• பெரும்பாலோர் எந்தவித இசைக்கருவிகளும் இல்லாமல் தங்கள் உதடுகளாலேயே எல்லா ராகங்களும் பாடும் திறமை பெற்றோர்.
• படிப்பறிவு இல்லை எனினும் அனுபவ அறிவால் இயற்கை வைத்தியத்தில் சிறந்தவர்களாக உள்ளனர். இவர்களில் ஒருவரான சு.சேகர் எனும் திருச்சியைச் சேர்ந்தவருக்கு படிக்காதவர் எனினும் 12 தலைமுறையாக மருத்துவம் செய்து வரும் அனுபவத்திற்கு சான்றாக தனியார் டாக்டர்கள் சங்கத்தால் 28.12.2001 அன்று மருத்துவ மாமணி பட்டம் வழங்கப்பட்டிருக்கிறது.

No comments:

Post a Comment