தேங்காய் மற்றும் வாழைப்பழத்தில் மாவுச்சத்து, புரதச்சத்து, கொழுப்புச்சத்து, தாது உப்புகள், உயிர்ச்சத்துக்கள் ஆகியவை நிறைந்துள்ளது.
இத்தகைய சத்துக்கள் நிறந்த தேங்காய் மற்றும் வாழைப்பழத்தை சேர்த்து உண்பதால் கிடைக்கும் நன்மைகள் இதோ,
நன்மைகள்
- வாழைப்பழம் சளியை வெளியேற்றவும், தேங்காய் வயிற்றிலுள்ள பூச்சிகளை வெளியேற்றவும் உதவுகிறது. ஆனால் தேங்காயை உடைத்தவுடனே சாப்பிடுவது நல்லது.
- தேங்காயைப் பச்சையாகச் சாப்பிடும் போது அதில் கொலஸ்ட்ரால் இருக்காது. எனவே சமையலில் பயன்படுத்துவதை தவிர்த்து பச்சையாக சாப்பிட வேண்டும்.
- உடல் உறுப்புகளின் வலிமையை அதிகரித்து, உடலின் உள் உறுப்புகளை தூய்மையாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
- தேங்காயை தினமும் உணவாக சாப்பிட்டு வந்தால், அது சருமத்தின் ஆரோக்கியத்தை பாதுகாத்து, மூட்டுகளில் உராய்வுள் ஏற்படாமல் தடுக்கிறது.
- பச்சைத் தேங்காயை சாப்பிடுவதால், அது தீமை செய்யும் கரையாத கொழுப்பை குறைக்கிறது.
- தேங்காய், வாழைப்பழத்தை சாப்பிடும் போது, அதிலுள்ள குளுக்கோஸ் நமது உடலுக்குத் தேவையான சக்தியை அளிக்கிறது.
குறிப்பு
வாழைப்பழத்துடன் தேங்காய் சேர்த்து சாப்பிடும் போது தேங்காயை பச்சையாக சாப்பிட வேண்டும். இல்லையெனில் நம் உடலில் கொழுப்பு அதிகமாகிவிடும்.http://news.lankasri.com/health/03/136583
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக