தொலைக்காட்சி!!

Search This Blog

Sunday, November 26, 2017

வெட்டி வீசுங்கள்: கேரளாவில் பெண்களுக்கு வழங்கப்பட்ட கொடூர தண்டனை இதுதான்


1900 ஆம் ஆண்டுகளில் இந்தியாவில் பெண்களுக்கு எதிராக சில மனிதாபிமானமற்ற நடைமுறைகள் அமலில் இருந்தன.
அதுவும் ஜாதியின் அடிப்படையில் பெண்கள் மிகவும் மோசமான துன்புறுத்தலுக்கு ஆளாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
தாழ்ந்த ஜாதியினர் என்றால் ஒரு சட்டம், உயர்ந்த ஜாதியினர் என்றால் ஒரு சட்டம் இருக்கும்.

கேரள மாநிலம் திருவாங்கூர் மாவட்டம்.( தற்போது திருவனந்தபுரம் என அழைக்கப்படுகிறது). இந்த மாவட்டத்தில் தாழ்ந்த ஜாதியை சேர்ந்த பெண்கள் மேலாடை அணியக்கூடாது. தங்களது உடலின் கீழ்புற பாகங்களை மட்டும் துணியால் மறைத்துக்கொள்ள வேண்டும்.
இதனால் இப்பெண்கள், தங்களுடைய மார்பகங்கள் பிறரின் பார்வைக்கு காட்சிப்படுத்தப்படுகின்றனவே என்று ஆதங்கம் கொண்டனர். அப்படி அவர்கள் மேலாடை அணிய விரும்பினால் அதற்கென்று தனியாக வரி செலுத்த வேண்டும்.

Namboodiri, Brahmin, Kshatriya மற்றும் Nair ஆகிய உயர்ஜாதி வகுப்பினரே மேலாடை அணிய அனுமதிக்கப்பட்டார்கள்.

ஒரு முறை தலித் பெண் ஒருவர் அனுமதியின்றி மேலாடை அணிந்திருப்பதை பார்த்த இளவரசி, அவரது மார்பகங்களை வெட்டி வீசுமாறு உத்தரவிட்டார்.
வரி செலுத்துகிறோம் என்ற நிபந்தனையின் அடிப்படையில் அவர்கள் மேலாடை அணியும் பட்சத்தில், அவர்களிடம் இருந்து வரி சரியான முறையில் வசூலிக்கப்படும்.

அப்படி வரிக்கட்டணம் செலுத்த தவறும்போது, அப்பெண்கள் தங்களது மார்பகத்தை வெட்டி வாழை இலையில் வைக்க வேண்டும் என்ற தண்டனை வழங்கப்படும்.

கீழ் ஜாதி பெண்கள் தங்களுடைய மார்பகத்தை மறைப்பது தண்டனைக்குரிய குற்றமாக கருதப்பட்டது.
http://news.lankasri.com/women/03/166112

No comments:

Post a Comment