தொலைக்காட்சி!!

Search This Blog

Saturday, November 11, 2017

உங்க ராசிக்கு எந்த வயதில் திருமணம் நடக்கும் தெரியுமா?


ஒருவரின் ராசியை வைத்து அவர்களுக்கு எந்த வயதில் திருமணம் நடக்கும், எப்படிபட்ட வாழ்க்கை துணை கிடைக்கும் என்பது பற்றி தெரிந்துக் கொள்ளலாம்.
மேஷம்
மேஷம் ராசிக்காரர்கள் எந்தவொரு விடயத்தையும் சீக்கிரமாக யோசித்து முடிவு செய்வார்கள். இவர்கள் எதையும் அதிகமாக யோசிக்கமாலேயே எடுக்கும் முடிவு கூட சரியானதாகவே இருக்கும்.
இவர்களுக்கு இருபது வயதுக்கு மேலும் அல்லது முப்பது வயதுக்கு முன்னரும் திருமணம் நடக்கும்.
ரிஷபம்
ரிஷபம் ராசிக்காரர்கள் தங்களது வேலை மற்றும் வாழ்க்கையில் மிகவும் கவனமாகவும், திறமையாகவும் செயல்படக் கூடியவர்களாக இருப்பார்கள்.
இவர்களுக்கு திருமண வாழ்க்கையில் அதிக நம்பிக்கை இருக்கும். அதுவும் இவர்கள் உணர்வு பூர்வமாக இணையும் ஒரு நபரை தான் திருமணம் செய்து கொள்ள நினைப்பார்கள்.
இவர்கள் மனதுக்கு பிடித்தவரை உடனடியாக தேடி பிடிக்க வேண்டும் என்பதில்லை. அவரே உங்களை தேடி வருவார். வயது என்பது இவர்களுக்கு ஒரு எண் மட்டுமே.
மிதுனம்
மிதுனம் ராசிக்காரர்கள் எப்போதும் இரு மனதாகவே இருப்பார்கள். இவர்கள் முடிவு எடுப்பதில் அதிக சிரமம் படுவார்கள்.
ஆனால் இவர்கள் எடுத்த முடிவில் தீர்மானமாக இருந்தால் 30 வயதிற்குள் திருமணம் நடக்கும்.
கடகம்
கடகம் ராசிக்காரர்கள் திருமணம் என்றாலும் குடும்பம் என்றாலும் மிகவும் விருப்பம். அதனால் இவர்கள் நீண்ட கால உறவு வேண்டும் என்றே நினைப்பார்கள்.
காதலில் புதுமைகள் வேண்டும் என்று நினைக்கும் இவர்களுக்கு 20 வயதிற்கு முன்னரே திருமணம் யோகம் வந்துவிடும்.
சிம்மம்
சிம்மம் ராசிக்காரர்கள் எதையும் யோசித்து, மிகச்சிறந்ததையே தேர்ந்தெடுப்பார்கள். ஆனால் இவர்கள் இயற்கையாகவே ஒருவரை பற்றி முழுமையாக தெரிந்து கொண்ட பின்னர் தான் காதலிக்க தொடங்குவார்கள்.
இவர்களுக்கு 20 வயதிற்கு மேல் அல்லது 30 வயதிற்கு முன் திருமணம் நடக்கலாம்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் மிகச்சிறந்த ஒருவரை கண்டால் மட்டுமே அவர் மீது காதலில் இணைவார்கள். ஆனால் இவர்களுக்கு 20 வயதிற்கு மேல் சிறந்த துணை கிடைக்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு திருமணம் என்றால் மிகவும் பிடிக்கும். ஆனால் இவர்கள் தனது உண்மையான துணையை கண்டுபிடிக்க சிறிது காலம் ஆகும்.
இவர்களுக்கு திருமண யோகம் 20 வயதிலேயே ஆரம்பித்து விடும்.
விருச்சிகம்
விருச்சிகம் ராசிக்காரர்கள் ஒரு மிகச்சிறந்த காதலர். அதனால் இவர்களுக்கு மனதிற்கு பிடித்த மாதிரி ஒரு நல்ல துணை எளிதில் கிடைத்துவிடும்.
அத்தகைய துணையை எப்போது திருமணம் செய்து கொண்டாலும் அவர்களின் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு காதல், திருமணம் போன்ற விடயங்கள் அனைத்தும் பிடிக்காத ஒன்று.
எனவே இவர்கள் எந்த ஒரு முடிவையும் எடுப்பதற்கு முன் பலமுறை யோசித்து நிதானமாக முடிவு செய்து கொள்வது சிறந்தது. ஆனால் இவர்களுக்கு 30 வயதிற்குள் திருமணம் நடக்கும்.
மகரம்
மகரம் ராசிக்காரர்கள் தங்களின் கடமையில் கவனமாக இருப்பார்கள். இவர்கள் மிகச்சிறந்த ஒரு நல்ல துணையாக இருப்பார்கள். இவர்களுக்கு 20 வயதிற்கு முன்னரே திருமண யோகம் ஆரம்பித்து விடும்.
கும்பம்
கும்பம் ராசிக்காரர்கள் தனக்கென்ற தனிமையான சுதந்திரத்தை விரும்புவார்கள். ஆனால் இவர்கள் துணையை தேடுவதில் அவசரப்படக் கூடாது. இவர்களுக்கு எந்த வயதிலும் ஒரு நல்ல துணை கிடைக்கலாம்.
மீனம்
மீனம் ராசிக்காரர்கள் காதல் மற்றும் வாழ்க்கையை பற்றி நிறைய கனவுகள் வைத்திருப்பார்கள்.
இவர்கள் தனது உணர்வுகளையும், யோசனைகளையும் புரிந்து கொள்ளும்படியான ஒரு நல்ல துணையை தேட வேண்டியது அவசியம். ஆனால் இவர்களுக்கு ஏற்ற துணை கிடைக்க நீண்ட நாட்கள் ஆகும்.

http://news.lankasri.com/astrology/03/136547

No comments:

Post a Comment