தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 27 நவம்பர், 2017

இந்துமதம் சொன்ன பாதைதான் ஜனநாயகமா?


நண்பன் ஒருவன் கேட்டான்
மச்சான் ஊர்ப்பட்ட கடவுளேடா உங்களுக்கு எதென்று கும்பிடுற நீங்க.
மாட்டிதான் சிங்கன்
சொன்னன்
டேய் 
உனக்கு ஜனநாயக நாட்டில் இருக்க விருப்பமா ?
சர்வாதிகார நாட்டில் இருக்க விருப்பமா ?
என்ன கேள்வி ஜனநாயகம்தான்
அப்போ கேளு
உலகத்துக்கே ஜனநாயகத்த படிப்பிச்சது இந்து மதம்
இந்து மதம் நீ ஏற்றாலும் ஏக்காட்டிலும் முதலில் தோன்றிய மதம்
எனவே மக்கள் பரந்து காணப்பட்டதால் ஒராளால் எல்லா காரியங்களையும் செய்வது கடினம்
எனவே ஒவ்வொரு துறைக்கும் ஒராளை போட்டார்
-சிவன் -
அவர்தான் ஜனாதிபதி
முடியாத சகல விடயங்களையும் இறுதியில் தீர்ப்பவர் அதோடு சரிசமமாக பிரச்சனைகளை தீர்த்து
கொண்டு போபவர்
அதோடு மனைவிக்கும் அவர் வேலையில் உள்ளபோது சில முடிவெடுக்கும் உரிமைகளை கொடுத்து பெண் உரிமையை சரிக்கு பாதி என உலகுக்கு அறிமுகப்படுத்தியவர்.
விஷ்ணு - இவர்தான் பிரதமர் அநேக அதிகாரங்கள் இவருக்குட்பட்டதாக அமையும் மற்ற துறை பொறுப்பாளர்கள் விளையாட்டு விடும் சந்தர்ப்பங்களில் தான் தலையிட்டு பிரச்சனைகளை தீர்க்க கூடிய அதிகாரங்கள் கொண்டவர்.
அடிக்கடி ஜனாதிபதி ஆதரவாளர்களுக்கும் பிரதமர் ஆதரவாளர்களுக்கும் முறுகல் நிலை தோன்றும் ஆனாலும் பாதிப்பு வராது
-சரஸ்வதி - கல்வி பொறுப்பாளர் கல்வி சம்பந்தமான பிரச்சனைகளை ஜனாதிபதியிடம் போகாமல் இவரிடம் போனால் தீர்ப்பது இலக்கு கல்வி சம்பந்தப்பட்ட விடையங்களை இவரே முடிவெடுப்பார்
-லட்சுமி - உள்நாட்டு உட்பத்தி, வெளிநாட்டு வேலைவாய்ப்பு ,வெளிநாடு குடிபுகுதல் வியாபாரம் தொடர்பான செயல்பாடுகள் இவர் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் இது தொடர்பாக ஜனாதிபதியை நாட தேவையில்லை
துர்க்கை - உள்ளூர் பாதுகாப்பு,போலீஸ்,அநீதிக்கான தண்டனை வழங்கள் போன்ற செயல்பாடுகள்
வைரவர் -எல்லை பாதுகாப்பு, இராணுவ பொறுப்பாளர் துப்பறியும் நாய் படையணி உட்பட
வீரபத்திரர் - விசேட அதிரடிப்படை,அதீத அநீதி தண்டனைகள்
அப்போ பிள்ளையார் முருகன் என்ன செய்கிறார்கள் என கேள்வி மனதில் விழும் சொல்கிறேன் கேள் ,
யாரை எதுக்கு பிடித்தாலும் முதலில் ஜனாதிபத்தியின் மகனை பிடித்தால் எதுவும் நடத்தலாம் என கூறியதும் இந்து மதம்தான் அதுதான்
எந்த காரியத்தை செய்ய தொடங்க முன்னும் பிள்ளையாரை வணங்க வேணும் என்பது அவர் நினைத்தால் எந்த வேலையும் இலகுவாக முடியும்.
மற்றவர் முருகன் இவர் ஜனாதிபதியின் கடைசி பிள்ளை விளையாட்டு பிள்ளை உஷாரான ஆள்
இப்போது உள்ள அரசியல் வாரிசுகள் இளம் பிள்ளைகளிடம்தான் சேட்டை செய்வார்கள் ஆனால் இவர் கிழவிகளைக்கூட விடவில்லை நாவல் பழத்துக்கே விளையாட்டு காட்டிய ஆள் ஆனால் அரசில் முக்கிய பொறுப்புக்களை முன்னின்று செய்பவர்
என்னதான் தனி தனி பிரிவுகள் இருந்தாலும் மலைகள் அது சார்ந்த கல் குவாரி துறைகள் இவர் வசம் அது தொடர்பான அலுவல்கள் வெளிநாட்டு யுத்தம் என்பன இவர் பொறுப்பு.
முக்கியமாக வான் படையை உலகுக்கு அறிமுகப்படுத்தியவர் அதோடு முதல் முதலில் உலகை விமானத்தில் சுற்றியவர்.
இதுமட்டுமல்ல ஒவ்வொரு அமைச்சின் கீழும் பல சித்தர்கள் சமய குரவர்கள் என பல பாராளுமன்ற உறுப்பினர்களை நியமித்து அருள் வழங்கி மக்கள் குறைகளை தீர்த்தவர் சிவன்
எனும் .
இப்போ இலகுவாக வோட்டை பெற்றால் பாராளுமற்றம் சென்றுவிடலாம் ஆனால் சிவன் அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதாயின் சொந்தம் பந்தம் சொத்து ஆடை அணிகலன் அனைத்தையும் தியாகம் செய்து பல சோதனைகளை கடந்து சென்றாலே உறுப்பினர் பதவி கிடைக்கும்.
பார்த்தியா ஒராள் கடவுளாக இருந்தால் எல்லா மக்களின் வேண்டுகோல்களை ஒராளால் நிவர்த்தி செய்ய முடியாது எனவே சிவன் தனது பொறுப்புக்களை பகித்தளித்து தமது மக்களுக்கான சேவைகளை செம்மனே செய்வதோடு உலகிக்கே ஜனநாயக அரசு முறைமையை அறிமுகப்படுத்திய மதம் மச்சான் எங்க மதம் என்றேன்.
அதோடு இவற்றை செய்தால் மனிதனாக தேக ஆரோக்கியமாக வாழலாம் என்றுதான் கூறுதே தவிர அதை பின்பற்றாவிடில் அதட்கான தண்டனையை அறிவிக்கவுமில்லை அதே நேரம் தண்டனையை வழங்கும் அதிகாரங்களை மானிடனிடம் வழங்கவுமில்லை.
என்ன ஜனநாயகம் ஜனநாயகம் என்று பல சுதந்திரங்கள் கொடுத்ததால் பல சர்வாதிகாரிகள் நிறைய மக்களை அடிமைப்படுத்த ஏதுவாய் போய் கிடக்கு இன்று
இப்போ சொல்லு நீ ஜனநாயகத்திலயா இருக்கா இல்ல சர்வாதிகாரத்திலயா இருக்கா ????????
அவசரமா call ஒண்டு வருது போயிட்டு வாறனே என்றான் ஆள காணல்ல.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக