அவர் தன் எண்ணத்தை தன்னுடைய தந்தையிடம் தெரிவிக்க, இதனால் பெரும் துயருற்றார் கந்தவர்மன். இந்த மாபெரும் அரண்மனையில் வாழவேண்டிய என் அன்பு செல்வமே நீ ஏன் மரணத்தை நோக்கி செல்ல விரும்புகிறாய் என கண்ணீர் மல்க கேட்டார் அந்த அரசர். நான் மரணத்தை நோக்கி செல்லவில்லை தந்தையே, மரணத்திற்கு அப்பால் உள்ள உண்மைகளை அறிய விரும்புகிறேன் என்றார் போதிதர்மர்.
அதோடு அரண்மனையில் வாழ்பவர்களை மரணம் அண்டாத? மரணம் என்பது அனைவருக்கும் ஒரு நாள் நிகழத்தான் போகிறது என்றார் போதிதர்மர். இத்தனை பெரிய பல்லவ சாம்ராஜ்யத்தின் வாரிசு நீ, உன்னுடைய கேள்விகளுக்கு என்னிடம் விடை இல்லை. ஆனால் நீ ஏதோ ஒரு உன்னத நோக்கத்திற்காக செல்லவேண்டும் என்று நினைக்கிறாய். உன்னை ஆசிர்வதித்து அனுப்புவதை தவிர எனக்கு இப்போது வேறு வழி இல்லை என்று கூறி கந்தவர்மன் போதிதர்மரை அனுப்பிவைத்தார்.
மரணம் குறித்தும் மரணத்திற்கு அப்பால் நடக்கும் நிகழ்வுகள் குறித்தும் போதிதர்மருக்கு இருந்த பல சந்தேகங்களை புத்த பீடத்தின் 27 வது பிரதான குருவான பெண்ஞானி பிரஜனதாரா தீர்த்து வைத்தார். சில காலத்திற்கு பிறகு போதிதர்மர் புத்த பீடத்தின் 28 – வது குருவானார். அதன் பிறகு போதிதர்மரை சீனாவிற்கு சென்று மக்கள் பணியாற்றும்படி பிரஜனதாரா கூறினார். அவரின் கோரிக்கையை ஏற்று போதிதர்மர் சீனா சென்றடைந்தார்.
சீனாவில் போதிதர்மர் பல தனித்துவங்களோடு விளங்கினார். அவரின் உரையை கேட்க மக்கள் பேரார்வம் கொண்டனர். எதை பற்றியும் கவலைப்படாமல் தன் மனதில் உள்ளதை அப்படியே கூறும் ஒரு மிக சிறந்த துறவியாக விளங்கினார் போதிதர்மர். பொதுவாக ஷாவ்லின் குகையில் இவர் உரையாற்றும் பொழுது மக்களை பார்த்து பேசுவது கிடையாது மாறாக சுவற்றை பார்த்து பேசுவாராம். யார் வருகிறார்கள் யார் போகிறார்கள் யார் சந்தேகம் கேட்கிறார்கள் இப்படி எதையும் இவர் கண்களால் பார்ப்பது கிடையாதாம். தன் உள்மன பார்வையில் மட்டுமே அக்கறை கொண்டு சுவருடன் பேசிக்கொண்டிருப்பாராம்.
இதையும் படிக்கலாமே:
கல்லறையில் இருந்தவரை உயிர் பெறச்செய்த ராகவேந்திரர் – உண்மை சம்பவம்
கல்லறையில் இருந்தவரை உயிர் பெறச்செய்த ராகவேந்திரர் – உண்மை சம்பவம்
இவருக்கு முன்பும் இவருக்கு பின்பும் புத்தபீடத்தில் பல குருமார்கள் இருந்துள்ளனர் ஆனால் இவருடைய பெயரும் புகழும் மட்டுமே பல்லாயிரம் ஆண்டுகளை கடந்தும் நிலைத்திருக்கிறது. போதிதர்மரை பொறுத்தவரையில் ஞானம் என்பது, “கடின உழைப்பும், விடாமுயற்சியும், சுறுசுறுப்போடு செயல்படுவதுமே ஆகும்”. புத்த மதம் அதிகளவில் பரவியுள்ள சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் உள்ள மனிதர்கள் இதை அடிப்படையாக கொண்டே இயங்குகின்றனர். அதனிலேயே அவர்கள் கடின உழைப்பாளிகளாகவும் எப்போதும் சுறுசுறுப்போடும் இயங்குகின்றனர்.
English overview:
Bodhidharmar history starts from Kanchepuram. He was the 3rd son of Pallava king kanthavarman who lived in 5th century. After certain period of time Bodhidharmar become a Buddhist monk. He went to china as per the advice from Prajanatara. Bodhidharmar was the 28th Patriarch of Buddhism. Chinese people respected him very much.
His quote for life is “work hard, Be active and never ever give up”. Now this is being followed by Buddhist in many part of the world.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக