தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 13 நவம்பர், 2017

வெளிநாடுகளில் இனத்துக்கு உயர்வுகொடுக்கும் தமிழ்ப்பெண்கள்!

கனடாவில் பொலிஸ் சேவையில் பிரபலமடைந்த இலங்கை தமிழ் பெண்!

கனடாவில் பொலிஸ் துணை கான்ஸ்டபிளாக பிரபலமடைந்துள்ள இலங்கையில் தமிழ் பெண் ஒருவர் தொடர்பில் அந்நாட்டு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இலங்கையில் இருந்து தனது 9 வயதில் கனடா சென்ற கிஷோனா நீதிராஜா என்ற பெண் அங்கு பொலிஸ் சேவையில் சிறப்பாக பணியாற்றி வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கனடாவில் பொலிஸ் சேவையில் ஈடுபடும் கிஷோனா நீதிராஜா, தனது அனுபவங்களை கனேடிய ஊடகம் ஒன்றிடம் பகிர்ந்துள்ளார்.
“ஒரு துணை கான்ஸ்டபிளாக எனது பயணம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பித்தது. 2015 ஆம் ஆண்டு நான் பட்டம் பெற்றேன். ஆனால் எனது உணர்வு இங்கு ஆரம்பிக்கப்பட்டதல்ல. எனது 9 வயதில் எனது குடும்பத்துடன் இலங்கையின் ஒரு சிறிய நகரத்திலிருந்து கனடாவுக்கு குடிபெயர்ந்தேன்.

எனது சிறுவயதிலிருந்து பொலிஸ் சேவையில் இணைய விருப்பம் கொண்டேன். ஆனால் மரபுசார்ந்த குடும்பத்தில் இருந்து வந்த எனது பெற்றோர், பொலிஸ் துறையில் பெண்கள் வேலை செய்வது குறித்து விருப்பம் இல்லாமல் இருந்தனர். இது என் கனவில் ஒரு தடையை ஏற்படுத்தியது.

பின்னர் Ryerson பல்கலைகழகத்தில் தாதியாக கல்வியை தொடர பதிவு செய்தேன். எனது நான்கு வருட பட்டப்படிப்பை முடித்துவிட்டு, என் கனவை கடைப்பிடிக்க முடிவு செய்தேன். தாதித் தொழில் மிகவும் பெரியது என்றாலும், என் மனம் குழந்தை பருவ கனவிலேயே இருந்தது.
அதிர்ஷ்டவசமாக, டொரண்டோ பொலிஸ் சேவையில் துணை கான்ஸ்டபின் பணியில் ஒரு தன்னார்வத் தொண்டராக விண்ணப்பிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது.

கனடாவில் எனது புதிய வாழ்க்கையை ஆரம்பித்தேன். நான் எப்போதுமே அன்புடனும் இருந்த மகிழ்ச்சியான அதிகாரிகளை சந்தித்தேன். பொலிஸ் அதிகாரிகள் செய்யும் வேலை உண்மையிலேயே ஆச்சரியமாக இருக்கின்றது, எனினும் சில நேரங்களில் அவை கவனிக்கப்படாமல் இருக்கின்றது.

தமிழ் சமூகத்தின் பலர் தமது சொந்த நாட்டில் சந்தித்த கசப்பான அனுபவங்கள் காரணமாக சட்ட அமுலாக்க துறை குறித்து அச்சத்திலேயே உள்ளனர். இந்த கருத்துகளை மாற்றுவதில் ஒரு பகுதியாகவும், அதேபோன்ற கனவுகளை பின்பற்ற விரும்பும் ஏனைய பெண்களை ஊக்கப்படுத்தவும் இது என்னை ஊக்கப்படுத்தியது.

எனது பல்கலைக்கழக 3 வது ஆண்டின் போது, பொலிஸ் அதிகாரி ஒருவர் MCIT உட்பட பல்வேறு சமூக ஈடுபாடு பற்றி விவாதிக்க கருத்தரங்கு ஒன்றிற்கு வருகைத்தந்திருந்தார். அவரது உரையாடலை நான் உண்மையில் விரும்பினேன். அது எனக்குள் ஒரு தீப்பொறியை ஏற்படுத்தியதை உணர்ந்தேன் மற்றும் எனது வாழ்க்கையை தொடர தைரியம் கிடைத்தது என எண்ணினேன்.

துணை கான்ஸ்டபிள் பதவியை வெற்றிகரமாக முடிந்த பிறகு, நான் என் பெற்றோருக்கு தகவல் வழங்கினேன். அவர்கள் மிகவும் மகிழ்ச்சியாகவும், எனது புதிய நிலை குறித்து உற்சாகமாகவும் இருந்தனர். எனது குடும்பம் மற்றும் நண்பர்கள் எனக்கு மிக பெரிய ஆதரவாக இருந்தனர். பொலிஸ் பணி தொடர்பான எனது குடும்பத்தின் கருத்து ஒரு நேர்மறையான உணர்வாக உருவாகி, அதிக ஆதரவோடு என் விருப்பம் மேலும் இந்த பணியை தொடர என்னை அனுமதித்தது.

ஒரு துணை கான்ஸ்டபிளாக என் புதிய பயணம் எனக்கு வாய்ப்புகளை பல்வேறு வகையாக அமுல்படுத்தியது. ஒரு துணை கான்ஸ்டபிளாக இருப்பது சமூகத்துடன் சாதகமான ஈடுபாட்டை அனுமதிக்கும் ஒரு வெகுமதி மற்றும் தன்னார்வ நிலையாகும். துணை அதிகாரிகள் என்பது சமூக தொண்டர்கள், மிகவும் அர்ப்பணிப்பு மற்றும் உறுதியான குழுவாகும். துணைப் பொறுப்பாளர்களாகவும், அதே அளவிலான எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கான பொறுப்பையும் நாங்கள் கொண்டுள்ளோம். இதில் நேர்மறையான தொடர்பும் அடங்கும் மற்றும் டொரொன்டோ பொலிஸ் பிரதான மதிப்பீடுகளை நிரூபிக்கவும் உதவும்.

துணை உறுப்பினர்கள் பல்வேறு பின்னணியிலிருந்தும், சமுதாயத்திற்கு சேவை செய்ய, தங்கள் நேரத்தை வழங்கவும் தன்னார்வ திறமையுள்ளவர்களாகவும் உள்ளனர். பொது உறவுகளை அதிகரிக்க தனிநபர்களுடன் ஈடுபடும் பல சமூக நிகழ்வுகளில் துணை கான்ஸ்டபிள்கள் பங்களிக்கின்றனர். இந்த வேலை எனக்கு பிடித்த பகுதியாக உள்ளது, ஏனெனில் நான் பல்வேறு நபர்களுடன் தொடர்பு கொள்ளவும், அதேபோன்ற நலன்களைக் கொண்ட மற்றவர்களுக்கு ஒரு முன்மாதிரியாகவும் இருப்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஒரு நாள் ஒரு பொலிஸ் அதிகாரியாகவும், தமிழ் சமூகத்தில் நேர்மறையான ஈடுபாட்டை வளர்ப்பதற்கு உதவுவதுமே எனது கனவாகும். தாதி சேவை எனக்கு நுண்ணறிவை கொடுத்தது, மக்களை வேறு விதத்தில் பார்க்கும்படி என் கண்களை திறந்தது. ஒரு பதிவு செய்யப்பட்ட தாதி என்ற முறையில், ஒரு மருத்துவ அலுவலராக பணியாற்றுவதற்காக என் மருத்துவ மற்றும் துணை அனுபவங்களை என்னால் இணைக்க முடிந்தது.

நான் செல்ல நீண்ட வழி மற்றும் செய்ய பல முன்னேற்றங்கள் உள்ளது. ஆனால் ஒவ்வொரு முறையும் எனது துணை கான்ஸ்டபிள் சீருடையை அணியும்போது, என் கனவுகளுக்கு நெருக்கமாக உணர்கிறேன்.
ஒரு பெண்ணாக, உடல் உடற்பயிற்சி என்பது பெரிய தடைகளில் ஒன்றாகும். ஆனால் அது என் விருப்பத்தை தொடர என்னை தடுக்காது. ஒவ்வொரு நாளும், நான் வலுவாக இருக்கவும், என்னை சிறப்பாக வைத்து கொள்ளவும் நான் கடினமாக உழைக்கிறேன். ஒரு நாள் என் கடின உழைப்பு எனக்கு பலன் கொடுக்கும் என நான் நம்புகிறேன்.

யார் எல்லாம் கனவுகளுடன் இருக்கின்றீர்களோ நீங்கள், உங்கள் இதயத்தை பின்பற்றுங்கள். நாம் விருப்பத்துடனும், அன்புடனும் செய்யும் ஒரு காரியத்தினால் மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்பதை எனது சொந்த அனுபவத்தின் ஊடாக நம்புகின்றேன். மகிழ்ச்சி உங்களை தேடி வரும். உங்களின் ஒவ்வொரு முயற்சியும் உங்களை ஒரு இடத்திற்கு கொண்டு செல்லும்....” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.





 http://www.tamilwin.com/canada/01/164946
என் கேள்விகள்:-பெற்றோருக்கு சொல்லாமல் பெற்றோருக்கு விருப்பமற்ற துறையில்சேந்த நீங்கள் அரசின் உத்தரவுகளை எப்படி உங்கள் மனசாட்சியுடன் செய்வீர்கள்?
சேவை என்பது பணம் பெறாமல் செய்வது என்பதை அறிவீர்களா?
தமிழ் சமூகத்தின் பலர் தமது சொந்த நாட்டில் சந்தித்த கசப்பான அனுபவங்கள் காரணமாக சட்ட அமுலாக்க துறை குறித்து அச்சத்திலேயே உள்ளனர். இந்த கருத்துகளை மாற்றுவதில் ஒரு பகுதியாகவும், அதேபோன்ற கனவுகளை பின்பற்ற விரும்பும் ஏனைய பெண்களை ஊக்கப்படுத்தவும் இது என்னை ஊக்கப்படுத்தியது என்கின்றீர்களே நீங்களே உங்கள் பெற்றோர் ஆசையை நிறைவு செய்யாமல் உங்கள் ஆசைக்கே முன்னிடம் கொடுத்துள்ளீர்கள்,அப்படியிருக்க தங்கள் ஆசைப்படி செயற்படும் மக்களை சட்டத்தின்படி நடக்க சொல்ல எப்படி உங்களால் முடியும்?
குடும்பத்தின் கருத்து ஒரு நேர்மறையான உணர்வாக உருவாகி என்பதன் கருத்து குடும்பம் பெண் என்ற காரணத்துக்காக மறுக்க நீங்கள் அதற்கு எதிராக அவர்கள் அறியாமலே பயிற்சியை முடித்துள்ளீர்கள்!அது சரியா?
எப்படி?
குடும்பத்திலுள்ள.இனத்திலுள்ள ஒழுங்கை,விதியை நீங்களே மதிக்காத போது மக்கள் சட்டத்தை மதிக்கும்படி எப்படி நீங்கள் சொல்லமுடியும்?
காவற்துறை அரசின் கட்டளைக்காக மக்கள் போராட்டங்களை ஒடுக்குவதே சட்டத்துக்கு முரணானதாக எப்படி அதை நீங்கள் ஏற்பீர்கள்?


நல்வாழ்த்துகள்!
பிரான்ஸ் நகர ஆட்சிகளில் ஒன்றான ville d'Avrayபிரிவில் இளம் நகர ஆட்சி ஆலோசராக (conseil municipal des jeunes)எமது மண்ணின் மகள் இளையாள் தெரிவுசெய்யப்பட்டு பதவி ஏற்றுக்கொண்டார் இது முதலாம் உலகப்போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட நாளான நேற்று11novembere நடை பெற்றது.!!
Srithar Vinasithamby அவர்களின் மகள் இளையாள்(அழகான தமிழ்ப்பெயர்-வாழ்த்துகள்!)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக