தொலைக்காட்சி!!

Search This Blog

Thursday, November 23, 2017

உங்க மனைவி உயரத்தில் உங்களைவிட கம்மியா?... செம்ம அதிர்ஷ்டசாலி நீங்க.


கணவன், மனைவி என்ற உறவில் இருமனம் இணைந்தால் போதும் இனிமை பொங்கி வழியும். ஆயினும், மூன்றாம் நபர்களின் பேச்சுக்கு செவி சாய்ப்பதே நமக்கு பழக்கமாகிவிட்டது.

அழகு முக்கியம், உயரம் பொருத்தமாக இருக்க வேண்டும், அப்பதான் “மேட் பார் ஈச் அதர்..” என வாய் நிறைய புகழும் மூன்றாவதுகளின் வாய். இதற்காக எங்கும் தம்பதிகளும் இருக்கிறார்கள்.

ஆனால், சமீபத்திய ஆய்வொன்றில் கணவன் உயரமாகவும், மனைவி கணவனை விட உயரம் குறைவாகவும் இருப்பவர்களாக இருந்தால், அவர்கள் தான் உலகின் மகிழ்ச்சியான ஜோடி என கண்டறிந்துள்ளனர்…

பொதுவாகவே ஒரு தம்பதி உயரத்தில் பொருத்தமாக இல்லை எனில், நமது சமூகம் அவர்களை கேலி செய்யும். அவர்கள் இருவரின் வாழ்க்கை மகிழ்சியாக இருக்காது என கருதும். இப்படி ஏன் இவர்கள் திருமணம் செய்துக் கொண்டார்கள் என வசை வார்த்தைகள் பேசும்.

ஆனால், சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றில் உயரமான கணவன், அவருடன் ஒப்பிடுகையில், உயரம் குறைவாக தெரியும் மனைவி. இந்த ஜோடி தான் உலகில் மிகவும் இன்பமான வாழ்க்கை நடத்துபவர்கள் என கண்டறிந்து கூறியுள்ளனர்.

உயரமான ஆண்களும், உயரம் குறைவான பெண்களுக்கும் மத்தியில் ரொமாண்டிக் உறவு சிறப்பாக இருக்கிறது. இது அவர்களது தாம்பத்திய வாழ்க்கையிலும் பிரதிபலிக்கிறது என இந்த ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளனர்.

மற்ற ஜோடிகளுடன் ஒப்பிடுகையில், இந்த உயரமான கணவன் மற்றும் உயரம் குறைவான மனைவி ஜோடியில், மனைவியின் மகிழ்ச்சிக்கு மிகப்பெரிய காரணமாக கணவர்கள் இருக்கிறார்கள் என்றும் ஆய்வார்கள் ஆய்வின் முடிவில் கூறியுள்ளனர். அதே போல, இவர்களது உறவும் நீண்ட காலம் நிலைத்து இருக்கிறதாம்.

இதனால், மற்ற உயர வித்தியாசம் கொண்ட தம்பதிகள் மகிழ்ச்சியாக இல்லை என கூறிவிட முடியாது. இந்த அறிவியல் ஆய்வறிக்கையில், ஒப்பிட்டு பார்க்கும் போது உயரமான கணவர்களும், உயரம் குறைவான மனைவியரும் அதிக மகிழ்ச்சியுடன் இல்லற பந்தத்தில் இணைந்திருப்பது தெரியவந்துள்ளது.

என்ன இருந்தாலும், கடைசியில்… அவரவர் மன பொருத்தம் தான் அவரவரின் இன்பகரமான இல்வாழ்க்கைக்கு முக்கிய காரணமாக அமைகிறது என்பதே உண்மையாகும்.

http://www.manithan.com/lifestyle/04/150849?ref=rightsidebar-jvpnews

No comments:

Post a Comment