தொலைக்காட்சி!!

Search This Blog

Friday, November 17, 2017

புத்தரின் எலும்புகள் சீனாவில் கண்டுபிடிப்பு

சீனாவில் நடைபெற்ற தொல்லியல் ஆய்வில் புத்தரின் எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சீனாவின் நாஞ்சிங் பகுதியில் பெட்டகம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சந்தன மரம், தங்கம், வெள்ளி ஆகியவற்றால் இந்த பெட்டகம் செய்யப்பட்டுள்ளது. இந்த பெட்டகம் 2010ஆம் ஆண்டிலேயே கண்டுபிடிக்கப்பட்டுவிட்ட போதும் தற்போதுதான் இதுகுறித்த தகவல்கள் சீன கலாச்சார பீடத்தின் இதழில் வெளியாகியுள்ளன.

தொல்லியல் ஆய்வாளர்கள் இந்த பெட்டகத்திற்குள் மகா புத்தரின் எலும்புகள் இருக்கக்கூடும் என கருதுகின்றனர். இந்த பெட்டகத்தின் மேல் யன்ஜிங், ஷிம்மிங் ஆகிய இரு துறவிகளின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.

லாங்ஜிங் மடாலயத்தில் உள்ள மங்சுஸ்ரீ கோவிலின் நிலத்துக்கு அடியில் உள்ள அறையில் இந்த பெட்டகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த பெட்டகத்தில் புத்தருடைய உடல்படிம எச்சங்கள் சுமார் 20 ஆண்டுகளாக சேரிக்கப்பட்டு 1013 ஆண்டுகளுக்கு முன்பாக புதைக்கப்பட்டுள்ளன.

இதேபோல்இ கிராண்ட் பேயோ கோவிலில் 4 அடி உயரம்இ 1.5 அடி அகலம் உடைய புத்த ஸ்தூபி ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது என்று சீன கலாச்சார பீடத்தின் இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.
http://www.canadamirror.com/world/04/150202

No comments:

Post a Comment