ஸ்பைடர் பட பாணியில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி தற்கொலைகளை தடுக்க பேஸ்புக் முடிவு செய்துள்ளது.
பேஸ்புக் லைவ் அல்லது பதிவுகளில் தற்கொலை சார்ந்த தகவல்களை பகிர்ந்து கொள்பவர்களை கண்டறியும் வகையில், பேஸ்புக் நிறுவனம் புதிய அம்சத்தினை வழங்க உள்ளது.
அதன்படி, பேஸ்புக் பதிவு அல்லது லைவ் வீடியோ உள்ளிட்டவற்றில் தற்கொலை சார்ந்த கருத்துக்களை ஒருவர் பயன்படுத்தும் போது Pattern Recognition என்னும் வழிமுறையை பயன்படுத்தி பேஸ்புக் கண்டறியும்.
இது குறித்து பேஸ்புக்கின் தயாரிப்பு மேலாண்மை பிரிவு துணை தலைவர் கை ரோசென் கூறுகையில்,
பேஸ்புக்கில் உள்ள நபர்களின் நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களில் யாராவது மனச்சோர்வில் இருந்தால், அவர்களுக்கு சரியான வழிகாட்டுதலை வழங்குபவருடன் இணைக்க பேஸ்புக் உதவி செய்து வருகிறது என தெரிவித்துள்ளார்.
மேலும், பேஸ்புக்கின் Proactive Detection எனும் அம்சத்தின் மூலமாக, உடனடியாக பதில் அளித்தவர்களுடன் இணைந்து பேஸ்புக் பணியாற்றியுள்ளது.
பேஸ்புக் பதிவுகளில் உதவி கேட்கும் அல்லது பிரச்சனைகளை குறிக்கும் சில வார்த்தைகள் கண்டறியப்படுகிறது. இந்த அம்சத்தின் கீழ் சில இடங்களில்
யாரும் அறியாத வீடியோக்களையும் தொழில்நுட்ப உதவியுடன் பேஸ்புக் கண்டறிந்துள்ளது எனவும் ரோசென் தெரிவித்துள்ளார்.
தற்கொலை தடுப்பு மற்றும் சுய தீங்கு விளைவிப்பவர்களுக்கு வழிகாட்டுவதில் அனுபவம் மிக்க குழுவினர் பேஸ்புக்கில் பணியாற்றி வருவதால், செப்டம்பர் மாதத்தில் ஒன்லைன் சவால்கள், சுய தீங்கு மற்றும் தற்கொலை
போன்ற சம்பவங்களை ஆதரிக்கும் வார்த்தைகள், ஹேஷ்டேக் மற்றும் குரூப் பெயர்களை இந்தியாவில் இயங்கி வரும் தற்கொலை தடுப்பு நிறுவனங்களுடன் இணைந்து சேகரிப்பதாக தெரிவித்தது.
உலக தற்கொலை தடுப்பு தினமான செப்டம்பர் 10ஆம் திகதி, துவங்கப்பட்ட இந்த திட்டத்தின் கீழ் தற்கொலை தடுப்பு மற்றும் இதற்கு ஆதரவளிக்கும் குழுவினர் சார்ந்த Toolsயை, இந்திய பயனர்களின் News Feedயில் பேஸ்புக் வழங்க துவங்கியது.
http://news.lankasri.com/internet/03/166270

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக