தொலைக்காட்சி!!

Search This Blog

Tuesday, November 7, 2017

கடவுளாக மாறிய மனிதர்! இலங்கையில் இப்படியொரு அதிசய வைத்தியரா


குணப்படுத்த முடியாது என கைவிடப்பட்ட கண் நோய் தொடர்பான நோயாளர்களுக்கு இலகுவாக சிகிச்சை வழங்கும் வைத்தியர் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

வெளிநாட்டு வைத்திய முறைகளை பயன்படுத்தி, குணப்படுத்த முடியாது என உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வைத்தியர்களினால் கைவிடப்பட்ட பலருக்கு மீண்டும் கண்பார்வை கிடைத்துள்ளது.

கெலனிகம லந்தே கெதர பந்து எனப்படும் பெயரில் அழைக்கப்படுகின்ற பிரபல பாரம்பரிய வைத்தியரின் உதவியில் பல உள்நாட்டவர், வெளிநாட்டவர்களுக்கு கண் பார்வை கிடைத்துள்ளது.

முற்றிலும் உள்நாட்டு மருத்துவ மூலிகைகளினால் தயாரிக்கப்பட்ட மருந்துகளில் வைத்தியம் பார்த்து கண் நோய்களை குணப்படுத்துவதில் அவர் பிரபலமடைந்துள்ளார்.

அதிநவீன வசதிகளை கொண்ட வெளிநாட்டு வைத்தியசாலைகளில் குணப்படுத்த முடியாத கண் நோயாளர்கள் பலரை, ஆயுர்வேத வைத்தியரான லந்தே கெதர பந்து குணப்படுத்தியுள்ளார்.

இலங்கையில் ஆயுர்வேத வைத்தியம் வீழ்ச்சி அடைந்து செல்லும் நிலையில், அதனை பாதுகாக்க சுகாதாரத்துறை அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு வைத்தியம் தற்போதைய பரம்பரையை விட்டு தூரமாகும் யுகத்தில் இவ்வாறானவைகளை பாதுகாப்பதற்கு சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கேட்டு கொள்ளப்படுகின்றது.

http://www.tamilwin.com/statements/01/164338

No comments:

Post a Comment