தொலைக்காட்சி!!

Search This Blog

Tuesday, November 14, 2017

இந்த அபூர்வம் இப்போதும் உள்ளதாம்: வியக்கும் அதிசயம்


உலகம் வியக்கும் அதிசயம் என்றாலே அதில் முதல் இடத்தை பிடிப்பது இயற்கை தான். அத்தகைய இயற்கையில் சில அபூர்வமான சில நிகழ்வுகள் இன்றளவும் நடந்துக் கொண்டிருக்கிறதாம். அவைகள்,
சிலந்தி மரங்கள்
பாகிஸ்தானில் வெள்ளம் வந்து நாட்டையே உலுக்கிய போது, சிலந்திகள் மரங்கள் முழுசும் வலைகளாக பின்னி மரமே பிரமாண்ட சிலந்தி வலையாக காட்சியளிக்கின்றது.

நீருக்கடியில் கோலங்கள்
ஜப்பானில் உள்ள ஒரு ஆழ்கடலில் பஃபர் எனப்படும் ஒரு வகை மீன்கள் கோலம் போல் அழகாக வட்டமாக ஒரே வடிவத்தில் டிசைன் செய்யுமாம்.

ரத்தப்போக்கு பனிப்பாறை
அன்டார்டிகாவில் இருக்கும் ஒரு பனிப் பாறையில் ரத்த நிறத்தில் ஒழுகிய வண்ணம் இருக்கிறதாம். அதற்கு காரணம் இரும்பு ஆக்ஸைடு உப்பு நீருடன் வினைபுரிந்து சிவப்பு நிறத்தில் மாறி இப்படி காட்சி அளிக்கிறது.

நீல நிற எரிமலை
இந்தோனோசியாவில் நீல நிறத்தில் எரிமலைக் குழம்பு உள்ளது. இதை பார்க்கவே அவ்ளோ அழகாக இருக்குமாம்.

உப்பு படிந்த பறவைகள்
தாஞ்சானியா நாட்டில் உள்ள நேட்ரான் ஏரியில் இருக்கும் பறவைகள் அனைத்தும் உப்பு படிந்த நிலையில் தான் இருக்குமாம். இதை பார்க்கவே ஒரு வித அச்சம் உண்டாகும்.

பல நிறத்தில் நிலங்கள்
சீனாவில் டான்க்ஷியா எனப்படும் இடத்தில் உள்ள நில அமைப்புகள் மிகவும் கவரக் கூடிய வகையில் கலர்ஃபுல்லாக இருக்கிறது. அதற்கு அங்குள்ள கனிமங்கள் தான் காரணமாம்.

உறைந்த பூக்கள்
ஆர்டிக் பெருங்கடலில் கடல் முழுக்க உறைந்த ஐஸ் கட்டிகளால் பூக்கள் போல் உறைந்திருக்குமாம்.

பச்சை அஸ்தமனம்
சூரியன் அஸ்தமனம் ஆகும் போதும் அங்கே ஆரஞ்சு சிவப்பு நிறத்தில் இருப்பது தான் இயல்பு. ஆனால் இங்கு பச்சை நிறத்தில் அஸ்தமனன் தெரியுமாம்.

அலைகள்
ப்ரேசிலில் இந்த மிகப்பெரிய அலை. இது முடிவேயில்லாமல் உருவாகும் மிகப்பெரிய அலைகள் வருடத்திற்கு இருமுறை மட்டுமே உண்டாகுமாம்.

தங்க குதிரை வால்
ஐக்கிய அமெரிக்காவில் யோஸ்மைட் தேசிய பூங்காவில் பாறைக்கு நடுவில் குதிரை வால் போல் தங்க நிரத்தில் சில நிமிடங்களுக்கு மட்டும் வந்து போகுமாம். அதுவும் இக்காட்சி வருடத்திற்கு ஒருமுறை மட்டும் நடக்குமாம்.

மேகம் தொப்பி
இந்த படத்தைப் பார்த்தால் அந்த மலைக்கு தொப்பி போட்டது போல் மேகம் சூழ்ந்திருக்கும். பார்க்கவே மனதை கொள்ளை அடிக்கிறது.

ஐஸ் முடிக்கற்றைகள்
இங்கிருக்கும் புற்கள் போல் ஐஸ் உறைந்து முடிக்கால்கள் போல் தோற்றமளிப்பது பார்ப்பதற்கு மிகவும் அழகாக தெரிகிறது.

நீர் சுழல்
ஆழ் கடலில் உண்டாகும் மிகப் பெரிய ஆழமான நீர்ச் சுழல் தான் இந்த படத்தில் இருக்கிறது. இதற்கு மேல்ஸ்ட்ரோம் அகா என்று இந்த சுழலுக்கு பெயருண்டு.

வானவில் மரங்கள்
வானவில் போல பல வண்ணங்களில் யூகலிப்டஸ் மரங்கள் ஆஸ்திரேலியாவில் காணப்படுகிறது. அதனை பார்த்தால் பெயின்ட் அடித்தது போல் பல கலர்களில் காணப்படுமாம்.

சிவப்பு சிலந்திகள்
கிறிஸ்துமஸ் ஐலேண்டில் சிவப்பு சிலந்திகள் ஒரு இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு சிவப்பு சிலந்திகள் இடம் பெயர்வது கண் கொள்ளாக் காட்சியாக இருக்குமாம்.

நீராவி டவர்
ஐஸ்லேண்டில் உருவாகும் மிகப்பெரிய ஸ்டீம் டவர். நீராவியினாலேயே மிக உயரமாக டவர் போல் காட்சியளிக்குமாம்.

கருப்பு சூரியன்
டென்மார்க்கில் லட்சக்கணக்கான மைனாக்கள் வானத்தில் பறந்த போது சூரியனையே மறைத்து விடுவதால் சிவப்பு நிறத்திற்கு பதிலாக சூரியன் கருப்பு நிறத்தில் காட்சியளிக்குமாம்.

அழியாத புயல்
வென்சுலாவில் வந்த இந்த புயல் 160 நாட்களுக்கு இருந்திருக்கிறது. மிக அதிக நாட்கள் இருந்த புயல் இதுவாகத்தான் இருந்திருக்கும்.

பாலைவன பூக்கள்
பாலைவனமாக இருந்த பூமி, ஒரு வருட மழைக்குப் பின் இப்படி பூக்காடாக மாறிவிட்டதாம்.

நீல நிற குழி
கடலுக்கு நடுவில் மிகப்பெரிய நீல நிற குழியாக மாறியிருக்கிறது இந்த இடம். டைவ் அடிப்பவர்களுக்கான தோதான இடம். இது பேலிஸ் என்ற நாட்டில் காணப்படுகிறது.

பட்டாம் பூச்சி
பல ஆயிரக்கணக்கான பட்டாம்பூச்சிகள் ஐக்கிய அமெரிக்காவில் இருந்து மெக்ஸிகோவிற்கு பறந்து போகிறது. வானமே பட்டாம் பூச்சியாக இருக்குமாம்.

கடலுக்குள் அருவி
கடலுக்கு அடியில் ஒரு நீர் வீழ்ச்சி மொரீஷியஸில் அமைந்திருக்கிறது. கடல் மண் முழுவதும் கடலுக்குள் உள்வாங்கியிருப்பதால் இப்படி நீர் வீழ்ச்சி போல் காட்சியளிக்கிறதாம்.

எரிமலை மின்னல்
எரிமலை வெடித்த போது உருவான மின்சாரத்தால் வானத்தில் மின்சாரம் பாய்ந்து மின்னல் போல் ஒளிர்ந்திருக்கிறது.

வெள்ளை வானவில்
வானவில் என்றாலே 7 நிறங்கள். ஆனால் இங்கு பனிமூட்டமே வெள்ளை நிறத்தில் வானவில்லாக காட்சியளிக்கிறது.


http://news.lankasri.com/natural/03/136736

No comments:

Post a Comment