சோழர்களது கண்டுபிடிப்புகள் எக்கஜக்கம், அரசோ ஆராய மறந்தது..! நாம் நம் வரலாற்றை ஆராய்ந்தால் மட்டுமே நம் இனத்தை பற்றிய அரிய தகவல்கள் கிடைக்கும்..
உதாரணத்திற்கு,
அன்று மழை வர ஹோமம் செய்தார்கள், எதற்கு ஏன்..? ஆராய்ந்து பார்க்காமலே மூட நம்பிக்கை என்று கூறி விட்டோம்..
அதன் பின் உள்ள அறிவியல் நம் எத்துனை பேருக்கு தெரியும்..?
ஹோமத்தில் அரிசி மற்றும் பசு நெய் ஊற்றுவார்கள்..நமக்கு இது நன்றாகவே தெரியும்.. இதனால் என்ன..?
அரசி மற்றும் பசு நெய் ஒன்றாக நெருப்பில் எரியும் போது உருவாகும் ஒருவிதமான வாயு இயற்கையாக மேகத்தில் உள்ள ஈரப்பதத்தை ஒருங்கிணைத்து மழையை பெய்ய செய்கிறது..இன்று தான் நமக்கு தெரியும் சில்வர் அயோடைடு செயற்கையாக மேகத்தில் தூவி மழை உருவாக உதவுகிறது என்று..
ஆனால் நம் முன்னோர்களுக்கு அன்றே தெரிந்துள்ளது..இது போன்று நம் முன்னோர்கள் காரணமின்றி எதையும் செய்ய வில்லை..
அரசு மறந்தது..?
பூம்புகார் – காவேரிப் பூம்பட்டினம். பண்டைக்கால சோழர்களின் தலைநகரம். இந்த நகரம் எப்படி இருந்தது, ஏன் அழிந்தது, மக்கள் வாழ்க்கை முறை எப்படியிருந்தது என்ற உண்மைகளை அறிந்தால்,
உலக நாகரீகங்களுக்கெல்லாம், ஏன் உலக மொழிகளுக்கெல்லாம் முன்னோடி நாம்தான் என்ற உண்மை வெளிப்படும்.சோழர்களின் தலைநகமான பூம்புகார் தமிழகத்தின் தற்போதைய நாகை அருகே 11500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இருந்தே இந்நகரம் இருந்ததாக ஆய்வில் தெரியவருகிறது.
2000 ஆண்டுகளுக்கு முன் கடல்கோளால் (சுனாமி) இந்நகரம் அழிந்துபோனது.இந்திய ஆழ்கடல் ஆராய்ச்சி நிலையம் பணப்பற்றாக்குறையால் இந்நகரம் பற்றி ஆராய்வதை நிறுத்திவிட்டது. திட்டமிட்டு நிறுத்தப்பட்டதா என்பது தெரியவில்லை.
ஆனால் ஆராய்ந்தால் பல அதிசயம் காத்திருக்கிறது என்று இங்கிலாந்து தொல்பொருள் ஆய்வாளர் கூறினார்..
சமீபத்தில் கூட,
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகில் உள்ள கங்கைகொண்ட சோழபுரத்தில், சோழர் காலத்தில் பயன்படுத்திய உறை கிணறு கண்டுபிடிக்கப்பட்டது.ஜெயங்கொண்டம் அருகில் உள்ள கங்கைகொண்ட சோழபுரத்தில், கோயிலிலிருந்து சுமார் 300 மீட்டர் தூரத்தில் உள்ளது..
அதுமட்டுமல்லாமல், இப்பகுதியில் 60-க்கும் மேற்பட்ட உறை கிணறுகளைத் தொல்லியதுறையினர் கண்டுபிடித்திருக்கிறார்கள். ஆனால், எதையும் தொல்லியல் துறையினர் வெளியில் சொல்வதில்லை. இதை ஆய்வு செய்ததுமில்லை.
சோழ வம்சத்தின் முக்கியமான மன்னர் ராஜேந்திர சோழன். அவர் தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி புரிந்த ஊர், ஜெயங்கொண்டம்.
அடுத்ததாக உலகமே வியக்கும் கரிகால சோழன்..அந்த காலத்தில் ஏது கல்லை ஒட்டும் பசைகள்..?? எப்படி உருவாக்கினர், அது இன்னும் தாங்குதே.!
ஆக மொத்தம் சோழர்கள் விஞ்ஞானிகளாகவே இருந்துள்ளனர்..
கடந்த வருடம் திறந்த வெளி கழிப்பறை அற்ற மாநிலாமாக சிக்கிம், கேரளா தேர்வு செய்யபட்டு இருந்தது..
தற்போது கூட அரசு திறந்த வெளி கழிப்பறை அற்ற மாநிலத்தை உருவாக்க பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துகிறது..
ஆனால் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே தமிழன் கழிப்பறை கட்டினான், என்பது தமிழனாகிய நமக்கே தெரியாது..இது நம்முடைய தவறு இல்லை..
அரசு நமது பண்பாட்டை ஆய்வு செய்ய மறுக்கிறது..கீழடி அகழ்வாராய்ச்சியில் எத்துனை இடர்பாடுகள்..?
சரி, இந்த கழிப்பறையை வடிவமைத்து கட்டியவர்கள் யார்..? அதே சோழ விஞ்ஞானிகள் தான்..
9ஆம் நூற்றாண்டு
கழிப்பறையை ஐரோப்பியர்கள் அறிமுகப்படுத்தவில்லை. இலங்கையில் சோழர்கள் அமைத்த தலைநகர் பொலநறுவையில் (நிகரிலி சோழ வளநாட்டுப் புலைனரி சனநாதமங்கலம்- பழமையான கழிப்பறைகள்) இருந்ததை பார்த்து அதை போன்றே அவர்களது நாட்டில் கட்டியுள்ளனர்..
நாமோ அவர்களிடம் இருந்து வந்தது என்று நினைத்து கொண்டிருக்கிறோம்..
http://www.seithipunal.com/social-media/history-of-soalrkal
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக