இன்றைய நவீன உலகில் வாழும் அனைத்து பெண்களுக்கும், பெண் குழந்தைகளை பெற்றவர்களும் தவறாமல் படிக்க வேண்டிய பதிவே இதுவாகும்.
பாவாடை தாவணி அணிந்த பெண்களுக்கு இன்று நவநாகரீக உடைகளுக்கு மாறிவிட்டனர். அவர்களின் மாற்றத்திற்கு ஏற்ப பல்வேறு நோய்களும் வர ஆரம்பித்துவிட்டன.
அன்றைய காலகட்டத்தில் பெண் பிள்ளைகள் பூப்படைந்ததில் இருந்து பாவாடை தாவணி கட்டுவதை வழக்கமாக கொண்டிருந்தனர். பின்னர் சில வருடங்கள் கழித்து சேலை கட்டினார்கள். இதற்கு காரணம் என்ன வென்று எப்போதாவது யோசித்தது உண்டா நீங்கள்..?
பருவமடைந்ததில் இருந்து கர்ப்பபை உள்ள இடத்திலும், தொப்பிளை சுற்றிலும் காற்றோட்டம் இருக்க வேண்டும் என்பதற்காகத் தான் பாவாடை தாவணி மற்றும் சேலை அணியும் பழக்கத்தை நம் முன்னோர்கள் ஏற்படுத்தினார்கள்.
அப்போது தான் அங்கு அதிக உஷ்ணம் ஏற்படாமல் இருந்து கர்ப்பபையை காக்கும் என்பதற்காகத்தான்.ஆனால் இப்போதோ அந்த இடத்தை காற்றோட்டம் படாமல் ஜீன்ஸ், டீ சர்ட், சுடிதார் என்று போட்டுக்கொண்டு கொள்வதால் கர்ப்பபை உஷ்ணம் அடைந்து அந்த உஷ்ணம் வெளியேற வழியின்றி உடலே கர்ப்பபையை காக்க, நீர்கட்டியை கர்ப்பபையிக்குள் எற்படுத்தி உஷ்ணத்தை குறைக்க முயற்சி செய்கிறது.
ஆதி காலத்தில் பெண்கள் வீட்டினை சாணம் இட்டு மொழுகுவார்கள். அது ஓர் சிறந்த உடற்பயிற்சி. வயிற்றினை அழுத்தி மண்டியிட்டு வேலைசெய்யும் பொழுது, நரம்புகளும், இடுப்பு எலும்புகளும் வலுப்படும். இன்றோ அனைவருக்கும் உட்கார்ந்து மற்றும் நின்றுகொண்டு செய்யும் வேலை.
ஐ.டி., சாஃப்ட்வேர் நிறுவனங்கள் என்று மணிக்கணக்காக உட்கார்ந்து வேலை செய்யும் பணிகளிலேயே ஈடுபடுகின்றனர். இதனால், இரத்த ஓட்டம் தடைபடுகிறது. ஆகையால், ஹார்மோன்களும் சரிவர இயங்குவதில்லை. இரவில் கண் முழித்து, பல வேலை செய்து, பகலில் தூங்குவதினால், உடல் வெப்பம் மிகும். இதனால், அதிகம் பாதிக்கப்படுவது பெண்களின் வயிற்றுப் பகுதியே.
இன்றைய தலைமுறையினரே நாகரீகம் வளர்ச்சி என்று எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியின் போதும் ஆரோக்கியம் என்ற விடயத்தில் பத்து அடி பின்னோக்கி செல்கிறீர்கள் என்பதனை மட்டும் மறவாதீர்கள் .
நம் பாட்டி காலத்தில் நாம் கேள்விப்படாத புதுப் புதுப் பெயரில் பெண்களுக்கு நோய்கள் இப்போது கேள்விப்படுகிறோம்… இதற்கு எம் புதிய வாழ்க்கைமுறையே காரணம்.
வேகமான வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு வேகாத உணவை வேகமாக உண்டு வேகமாக உடுத்தும் மோசமான உடைகளை உடுத்தி வேகமாக உழைத்து வேகமாகவே மடிந்தும் விடுகிறோம்…
புதிய வாழ்க்கை முறையில்..
பருவம் அடையும் பிள்ளைகளை நகரில் உள்ள இளம் தாய்மார் பக்குவமாக கவனிக்காமல் விடுவதும் கர்ப்பப்பை வியாதிகளுக்கு காரணம் ஆகிறது.
Source: Sentamil
http://www.manithan.com/women/04/150170
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக