தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 1 நவம்பர், 2017

இனிமேல் தொண்டை கிழிய தமிழின் பெருமைகளை நாம் பேசவேண்டாம்... இனி உலகமே பேசப்போகிறது!!


இனிமேல் தொண்டை கிழிய தமிழின் பெருமைகளை நாம் பேசவேண்டாம்... இனி உலகமே பேசப்போகிறது,தமிழினத்தின் முடிவுகளை உலகமே ஏற்கும் பின்னணி..?

நம் தமிழ் மொழி எத்தனை பெருமைகளை கொண்டது என்பதை நாம் அறிவோம். உலகமும் அறியும். ஆனால் பலருக்கு அதிகம் தெரிவதில்லை காரணம் ஆதாரங்கள்.
என்னதான் நம்மிடம் அதற்கான ஆதாரங்கள் இருந்தாலும் அதை நிருபணம் செய்ய ,ஆணித்தரமாக பதிவு செய்ய, மறுத்து பேசாமல் இருக்க, நம்பிக்கையுடன் ஏற்றுக்கொள்ள வைக்க ஒரு மத்திமம் தேவைப்படுகிறது.
அது தான் "ஆராய்ச்சி முடிவுகள்" . இது முனைவர் பட்டம் பெற்ற பல பேரின் கருத்துக்களை அறிந்தும் அவர்கள் இது சரிதான் என்று ஏற்றுக்கொண்ட பின்பே முடிவுகளாக அறிவிக்கப்படும்.
உலகின் உள்ள பல்வேறு மக்களும் அதை பின் ஏற்றுக்கொள்வர். இனி தமிழ் மொழியும் உலக புகழ் பெற்ற ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் ஆய்வு மேற்கொள்ளப்படும்.

அதற்கான "தமிழ் இருக்கை" க்கு தேவையான 33 கோடியில், ஏற்கனவே 23 கோடி வரை உலக தமிழர்கள் நிதி அளித்தனர்.பற்றாக்குறையாக இருந்த சுமார் 10 கோடியை தமிழக அரசு அளித்துள்ளது.
இனி தமிழ் மொழியில் உலகத்தரம் வாய்ந்த ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படும். அதன் முடிவுகளை உலகமே ஏற்கும், அத்தனை நம்பகமானது ஹார்வர்ட்.

நம் பெருமைகளை உலகமே அறியும். ஏற்றும் கொள்வர். இனி தொண்டை கிழிய பெருமைகளை நாம் பேசவேண்டாம். ஹார்வர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சி முடிவுகள் பேசும். உண்மை என்றும் அழியாது அழிக்கவும் முடியாது.
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா. இந்த மகிழ்ச்சியான செய்தியை அனைவருக்கும் பகிரவும். செந்தமிழ் மொழியின் வரலாற்றில் மிகமுக்கியமான கட்டம் இது.
நன்றி: தனித்தமிழ்

http://www.seithipunal.com/culture/the-move-came-following-requests-made-to-late-chief-min


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக