தொலைக்காட்சி!!

Search This Blog

Sunday, November 12, 2017

உடலில் ஏற்பட்ட நோய்: நாக்கை வைத்து தெரிந்து கொள்ளலாம்!


நம் நாக்கில் உள்ள சில அறிகுறிகளை வைத்து நம்முடைய உடலில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் என்னவென்று அறிந்துக் கொள்ளலாம்.
வெள்ளை திட்டுக்கள்
வாயில் ஏற்படும் புண்கள் மற்றும் நாக்கில் ஏற்படும் வெள்ளை, சிவப்பு, சாம்பல் ஆகிய நிறமுள்ள திட்டுக்கள், நோயெதிர்ப்பு மண்டலத்தின் பாதிப்பு, அதிகமான பூஞ்சை வளர்ச்சிகள், நோயெதிர்ப்பு சக்தி குறைவு மற்றும் ரத்தசோகை போன்ற நோய்களின் அறிகுறியாக தோன்றுகிறது.

கரும்படலம்
மோசமான வாய் சுகாதாரம், மது, புகையிலை, ஆண்டிபயோடிக் அதிகமாக உபயோகித்தல் போன்ற காரணமாக நாக்கில் சிறிய கருப்பு புள்ளி படலம் போன்ற அறிகுறிகள் உருவாகிறது.

வெள்ளையான வட்டம்
ஃபோலிக் அமிலம், B12 மற்றும் இரும்புச்சத்து குறைபாடு போன்ற காரணத்தினால், நாக்கு சிவத்தல் மற்றும் நாக்கில் வெள்ளையான வட்டம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

நாக்கு அழற்சி
லிச்சென் பிளானஸ் எனும் அழற்சி நிலை, சளி சவ்வுகளை பாதிக்கும் ஒரு வாய்வழி பிரச்சனை. இது வெள்ளை, சிவப்பு நிறத்தில் வீங்கிய திசுக்கள் அல்லது திறந்த புண்களாக கூட உருவாகலாம். அப்படி ஏற்பட்ட இந்த புண்கள் எரிச்சல், வலியை ஏற்படுத்தும்.

நாக்கில் ஏற்படும் அழுத்தம்
நாக்கு மற்றும் பற்களில் அழுத்தம் ஏற்படுதல் போன்ற அறிகுறிகள் தெரிந்தால், உடனடியாக பல் மருத்துவரின் ஆலோசனை பெற்றுக் கொள்வது மிகவும் அவசியமாகும்.


http://news.lankasri.com/disease/03/127977

No comments:

Post a Comment