ஜேர்மனியில் உள்ள அருங்காட்சிகம் ஒன்றில் வைக்கப்பட்டுள்ள ஓவியம் தற்போது பலரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறது.
நவீன காலத்தில் செல்போன்களின் புரட்சி பெருமளவில் வளர்ந்து வரும் நிலையில், ஆப்பிள் போன்கள் மீதான மோகம் இன்றைய தலைமுறையனருக்கு அதிகரித்து வருகிறது.
ஆப்பிள் போன்கள் விற்பனைக்கு வந்து சில ஆண்டுகளே ஆகியுள்ள நிலையில், இந்த அருங்காட்சிகத்தில் வைக்கப்பட்டுள்ள ஓவியம் ஒன்று பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
ஓவியத்தில் பெண் ஒருவர் குறுகிய தடம் ஒன்றில் நடந்து வருகிறார். ஆனால், தலையை குனிந்தவாறு ஒரு ஸ்மார்ட்போனை பார்த்துக்கொண்டு வருவது போல் ஓவியம் வரையப்பட்டுள்ளது.
ஓவியத்தை முதல் முறை பார்க்கும்போது ஒரு வினாடி நேரத்தில் ‘அவர் ஆப்பிள் போனை பார்த்துக்கொண்டு வருகிறார்’ என்பது போலவே தோன்றுகிறது.
ஆஸ்திரியாவை சேர்ந்த Ferdinand Georg Waldmüller என்பவரால் கடந்த 1850-ம் ஆண்டு இந்த ஓவியம் வரையப்பட்டு முனிச் நகரில் உள்ள Neue Pinakothek அருங்காட்சிகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ள இந்த ஓவியம் தொடர்பாக பேசிய சில வல்லுநர்கள் ‘பெண்ணிடம் செல்போன் இல்லை. ஒருவிதமான மதம் தொடர்பான புத்தகத்தை அவர் படித்துக்கொண்டு நடந்து செல்வதாக’ கருத்து தெரிவித்துள்ளனர்.
எனினும், பெண்ணின் தலை மற்றும் கைகளின் பாவனைகளை பார்க்கும்போது அவர் தனது கையில் ஆப்பிள் போனை வைத்துள்ளதாகவே சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக