தொலைக்காட்சி!!

Search This Blog

Tuesday, November 28, 2017

இந்த ராசியில் உள்ள ஆண், பெண் திருமணம் செய்யக் கூடாது


ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் திருமணம் பந்தம் என்று வரும் போதும், இரண்டு ராசிக்காரர்கள் இணையும் போது அவர்களின் வாழ்க்கையில் பலவித மாற்றங்கள் ஏற்படும்.
ஆனால் திருமணம் ஆன ஆண் மற்றும் பெண் ஒரே ராசியாக இருந்தால் அவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று ஜோதிடம் கூறுவதை பார்க்கலாம்.
மேஷம்
மேஷம் ராசிக்காரர்கள் அறிவுப் பூர்வமாக முடிவு எடுத்து தான் செய்வதே சரி என்று நினைப்பார்கள். இந்த ராசியில் ஆணும், பெண்ணும் திருமணம் செய்துக் கொண்டால், இவர்களின் உறவில் தொடர் பிரச்சனை, சண்டைகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் தனது விடாமுயற்சி மற்றும் லட்சியத்தை நோக்கி பயணிப்பவராக இருப்பார்கள். இந்த ராசியில் ஆண் மற்றும் பெண் திருமணம் செய்துக் கொண்டால், இவர்களின் எண்ணங்கள், கருத்துக்கள் ஒரே மாதிரியாக இருக்கும். அதனால் இவர்களின் வாழ்க்கை ஈடுபாட்டுடன், உற்சாகத்துடன் இருக்கும்.
மிதுனம்
மிதுனம் ராசிக்காரர்கள் மகிழ்ச்சியான நேரத்திலும் எல்லை மீறாதவர்களாக இருப்பார்கள். இந்த ராசி ஆணும், பெண்ணும் திருமணம் செய்துக் கொண்டால், அவர்களின் உறவில் ஈர்ப்பு இருக்கும். ஆனால் இவர்களில் ஒருவர் ஈர்ப்புடன் இருந்தால், மற்றொருவர் சமநிலை இன்றி காணப்படுவார்.
கடகம்
கடகம் ராசிக்காரர்கள் யாருக்காகவும் தனது குறிக்கோளை மாற்றிக் கொள்ளாதவர்கள். இந்த ராசியில் திருமணம் செய்துக் கொள்ளும் ஆண் மற்றும் பெண் உணர்ச்சிபூர்வமான குணம் கொண்டவராக இருப்பார்கள். ஒருவர் மற்றொருவருடைய உணர்வை புரிந்து நடந்துக் கொள்வதால் இவர்களின் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
சிம்மம்
சிம்மம் ராசிக்காரர்கள் உள்ளொன்று வைத்து புறமொன்று பேச தெரியாதவர்கள். இந்த ராசியில் ஆணும், பெண்ணும் திருமணம் செய்துக் கொண்டால், இவர்களின் இடையில் முதலில் நிற்பது முன்கோபமாக இருக்கும். ஆனால் இவர்கள் பொறுமையுடன் வாழ்க்கை நடத்தினால் பிரச்சனைகள் ஏற்படாது.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் காத்திருந்து காய் நகர்த்துவதில் வல்லவர்கள். இந்த ராசி ஆண் மற்றும் பெண் திருமணம் செய்துக் கொண்டால், இவர்கள் ஒருவர் மீது ஒருவர் அதிக நம்பிக்கை கொண்டிருப்பதால், ஒருவருடைய மேன்மைக்கு மற்றொருவர் உறுதுணையாக திகழ்வார்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் தனது வெற்றி நோக்குடன் செயல்படுவார்கள். இந்த ராசியில் உள்ள ஆண், பெண் திருமணம் செய்துக் கொண்டால், இவர்கள் தங்களுக்குள் உள்ள தவறுகளை ஒப்புக் கொண்டு புரிந்து வாழ்வார்கள். அதனால் இவர்களின் உறவில் பிரிவு ஏற்படாது.
விருச்சிகம்
விருச்சிகம் ராசிக்காரர்கள் சாதனை படைக்கும் மனம் கொண்டவர்கள். இந்த ராசியில் உள்ள ஆண் மற்றும் பெண் திருமணம் செய்துக் கொண்டால், இவர்களுக்கு இடையில் ஈர்ப்பு, கவர்ச்சி அதிகமாக இருக்கும். ஆனால் வாழ்வில் அடிக்கடி சண்டை, சச்சரவுகள் ஏற்பட்டு விரிசல் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் தான் எடுத்த காரியத்தை திறமையுடன் முடிக்கும் குணம் படைத்தவர்கள். இந்த ராசியில் ஆண், பெண் திருமணம் செய்து கொண்டால் அவர்கள் திருமண பந்தத்தில் இணையும் போது ஒற்றுமையாக இருப்பார்கள்.
இவர்கள் ஒருவருக்கொருவர் அதிக நேரத்தை செலவிட நினைப்பார்கள். ஆரோக்கியமான விவாதம், உற்சாகத்துடன் தனது கருத்துக்களை பகிர்ந்துக் கொள்வார்கள்.
மகரம்
மகரம் ராசிக்காரர்கள் சுறுசுறுப்பாக தனது பணிகளை செய்து முடிக்கும் திறம் கொண்டவர்கள். இந்த ராசியில் ஆண், பெண் திருமணம் செய்துக் கொண்டால் இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்துக் கொள்வார்கள். அதனால் இவர்களின் உறவு சிறப்பாக இருக்கும்.
கும்பம்
கும்பம் ராசி கொண்ட ஆண், பெண் திருமணம் செய்துக் கொண்டால், இவர்கள் ஒருவரை ஒருவர் சகித்துக் கொண்டு வாழும் திறன் கொண்டவராக இருப்பார்கள்.
மீனம்
மீனம் ராசியில் உள்ள ஆண், பெண் திருமணம் செய்துக் கொண்டால், இவர்கள் இருவேறு பார்வைகள் கொண்டவர்கள். அதனால் இவர்கள் தனித்துவம் வாய்ந்தவராக விளங்குவார்கள்.

http://news.lankasri.com/astrology/03/166258?ref=home-latest

No comments:

Post a Comment