தொலைக்காட்சி!!

Search This Blog

Friday, November 24, 2017

பெண் பார்ப்பது...?

ஒரு வாலிபன் தன்னுடைய குருவிடம்...
எனக்கு என் தாயார் திருமணம் முடிக்க ஆசைப்படுகிறார். குருவே எனக்கும் அதில் ஆசைதான்... நான் எப்படிப்பட்ட பெண்ணை திருமணம் செய்வது என்றான்...
குருநாதர் சொல்கிறார்...
*அழகானவளை முடிக்காதே! அடுத்தவன் அவள் மீது ஆசைப்படக் கூடும்,
*அழகில்லாதவளை முடிக்காதே! ஒருவேளை உனக்கே அவளை பிடிக்காமலும் போகும்,
*உயரமானவளை முடிக்காதே! ஒவ்வொரு வார்த்தைக்கும் உன் கழுத்து சுலிக்கக் கூடும்,
*குள்ளமானவளை முடிக்காதே! உனக்கு அது சரியான ஜோடியாக இருக்காது,
*பருமனானவளை முடிக்காதே! உன் வருமானம் அவளுக்கு போதாது,
*மெலிந்தவளை முடிக்காதே! வீட்டில் அவள் எங்கே என நீ தேடுவாய்,
*வெள்ளையானவளை முடிக்காதே! அவளை காணும்போதெல்லாம் உனக்கு மெழுகுவர்த்திதான் ஞாபகம் வரும்,
*கருத்தவளை முடிக்காதே! இருட்டில் அவளை கண்டு நீயே பயப்படக் கூடும்,
*படிக்காதவளை முடிக்காதே! நீ கூறுவதை அவள் புரிந்துகொள்ளமாட்டாள்,
*படித்தவளை முடிக்காதே! உன் பேச்சையே அவள் கேட்கமாட்டாள்,
*பணக்காரியை முடிக்காதே! உனக்கு அந்த இடத்தில் மரியாதை இருக்காது,
*ஏழையை முடிக்காதே! உனது மரணத்திற்கு பிறகு உன் குழந்தைகளும் சிரமப்படும்,
*அதிக அன்பானவளை முடிக்காதே! நீ வாழவும் இயலாது சாகவும் இயலாது,
*கோபக்காரியை முடிக்காதே! உன் வாழ்க்கை நரகமாகிவிடும்,
*அனைத்தும் தெரிந்தவளை முடிக்காதே! உன் மீது சந்தேகம் கொள்வாள்,
*ஒன்றும் தெரியாதவளை முடிக்காதே! நீ வீட்டு வேலைக்காரனாய் மாறிவிடுவாய்,
*அமைதியானவளை முடிக்கதே! நீ இறந்துபோனாலும் அவள் மௌனமாகத்தான் இருப்பாள்,
*பரபரப்பானவளை முடிக்காதே! நீ சொல்வது அவள் காதில் விழாது,
*ஊருக்குள்ளே பார்த்து முடிக்காதே! தாய் வீட்டில் கோழி முட்டையிட்டாலும் அதை காண ஓடுவாள்,
*தூரத்தில் பார்த்தும் முடிக்காதே! அடிக்கடி பயணம் செய்வதிலேயே உன் வாழ்க்கை முடிந்து போகும்,
என்று கூறி பெறும் மூச்சுவிட்டார் குருநாதர்...
இதை கேட்ட அந்த வாலிபன் கடுமையான கோபத்தோடு சொல்கிறான்...
"ஏன் குருவே இதற்கு நீங்கள் திருமணமே வேண்டாம்!" என்று சொல்லிவிடுங்களேன். 😞
குரு மென்மையான ஒரு சிரிப்புடன் சொல்கிறார்...
"சொன்னா எவன்பா! கேட்கிறான்!" 🙂
மண் மீது ஆசைபட்ட பல்வாழ் தேவனும் இறந்து விட்டான். பெண் மீது ஆசைபட்ட பாகுபலியும் இறந்துவிட்டான்...
எதற்கும் ஆசைபடாத கட்டப்பா இறுதி வரை உயிருடன் இருந்தார்...
கெட்டப்பா வாழ்றத விட கட்டப்பா மாதிரி வாழலாம்....

Suthan Paramanathy

No comments:

Post a Comment