தொலைக்காட்சி!!

Search This Blog

Monday, November 27, 2017

யூதரின் வெற்றியும் அறிவும்!


ஆதியில் யூத இனம் அறிவார்ந்த இனமல்ல, ஆனால் அன்றைய அறிவு களஞ்சியமான எகிப்தில்தான் அது நாகரீக வளர்ச்சி அடைந்தது, பின் மோசே காலத்தில் விடுதலையாகி இன்றைய இஸ்ரேலுக்கு வந்தது.
முதன் முதலாக சாலமோன் காலத்தில் அது உலகத்தினரால் கவனிக்கபட்டது, அவர் அமைத்த ஜெருசலேம் ஆலயமும், அவரின் ஞானமும், அறிவும், அவரின் அரியணையும், அரண்மனையும் உலகத்தினரால் மிகவும் வியந்து பார்க்கபட்டது, அன்று முடிந்தவர்கள் நேரில் சென்று பார்த்து வியந்தனர். இன்றும் உலகின் பல மதத்து ஆலயங்கள் என்பது சாலமோன் அமைத்த ஆலயத்தின் அடிப்படையிலேதான் அமைந்திருக்கும். அன்றிலிருந்தே தான் யூதர்கள் வித்தியாசனமானவர்கள் எனும் பெயர் தொடங்கிற்று, பின்னாளில் பாபிலோனிய மன்னன் ஆலயத்தை இடித்து அவர்களை அடிமையாக்கி கொண்டுசென்றான், மீண்டு வந்தார்கள். பின் அலெக்ஸாண்டர், ரோமர் என அடிமைபட்டார்கள், பின் இயேசு காலம், அதன் பின் ரோமரை பகைக்கபோய், ரோமை அரசு அவர்களை இஸ்ரேலை விட்டே விரட்டிற்று, அதாவது அவர்களின் காலமெல்லாம் கொஞ்சநாள் இஸ்ரேலில் இருப்பார்கள், பின் எங்காவது அடிமைபடுவார்கள்.
கடந்த 2 ஆயிரம் ஆண்டுகளாக உலகெல்லாம் சிதறி இருந்தார்கள், அவர்களுக்குள்ளான பெரும் நம்பிக்கை என்னவென்றால், நாம் கடவுளின் மக்கள், நாம் உழைப்பதெல்லாம் ஜெருசலேமிற்காக, ஆகவே கூடியமட்டும் அதிகமாக சம்பாதித்து ஜெருசலேமினை விடுவிக்க வேண்டும், ஆலயம் கட்ட வேண்டும், வல்லவரான‌ மெசியா வரும்பொழுது சகலமும் தயாராக இருக்கவேண்டும். இதுதான் யூதனின் மனம், அவனது சித்தாந்தம். அதனடிப்படையில் நுணுக்கமாக உழைத்தார்கள், நிறைய படித்தார்கள், சிந்தித்தார்கள் அறிவாளிகள் என பெயரும் பெற்றார்கள். 18ம் நூற்றாண்டு அறிவு புரட்சியில் முண்ணணியில் நின்றார்கள், ஐரோப்பாவின் மிக சிறுபான்மை ஆயினும், அறிவில் சிறந்த இனம் ஒப்புகொள்ளபட்டார்கள், அந்த பொறாமையில் வாங்காத அடி இல்லை, படாத அவமானமில்லை. இறுதியாக அறிவில் சிறந்தது யூதனா, ஜெர்மானியனா (அவர்களும் மிகபெரும் அறிவாளிகள்) எனும் போட்டியில் ஹிட்லர் யூத இனத்தையே அழிக்க துணிந்து இறுதியில் இஸ்ரேல் உண்டாயிற்று. ஆனாலும் நாடு சுதந்திரமான மறுநாள் யுத்தம், யார் தாங்குவார்? அவர்கள் அட்டகாசமாக ஜெயித்தார்கள், ஜெருசலேம் பாசம் அப்படி. அதன் பின் எண்ணற்ற சிறு யுத்தம், ஏராளமான பெரும் யுத்தம். துப்பாக்கி கீழே வைத்த‌ நிறுத்திய மறுநிமிடம் இஸ்ரேல் இருக்காது என்பது அவர்களுக்கு தெரியும், அதனால் சுற்றி இருக்கும் அரபு தேசங்கள் ராணுவ ரீதியாக தங்களை மிஞ்ச கூடாது அவர்கள் மொசாத் மூலம் எடுக்கும் நடவடிக்கை ஏராளம், அரேபியர்களின் அர்த்தமில்லா ஒற்றுமையின்மையும் அதற்கு துணை செல்கின்றது. இப்படி கடந்த 4 ஆயிரம் வருடமாக ஜெருசலேம் எனும் ஒற்றை நகரத்திற்காக போராடும் இனம் அது, மற்றபடி ஜப்பானியரின் அறிவோ, சீனரின் நூடுல்ஸோ, அவர்களுக்கு பிரச்சினை இல்லை. உலகினை யாரும் ஆளுங்கள், ஆனால் இஸ்ரேல் எங்களுக்கானது, அதனை காக்க பணம் வேண்டும், ஏராளமாக வேண்டும், படிக்கின்றோம், உழைக்கின்றோம் என்பது அவர்கள் சித்தாந்தம். அறிவில் சிறந்த ஜெர்மானியரோடு கூட அவர்களாக மோதவில்லை, ஜெர்மானியர்தான் மோதி பாதிக்கபட்டார்கள், இஸ்ரேலியர் அப்படித்தான்.
2000 ஆண்டுகளுக்கு முன்பாக ரோமையரால் அகதியாக்கபட்ட யூதர் பலர் கொச்சி வந்தனர், 1948ல் இஸ்ரேல் உருவாக்கபட்டவுடன் பலர் சென்றும்விட்டனர். அப்படி யூதன் இருக்கையில் நாமோ ஓர் இரு தசாப்தங்களுக்கு முன் வந்து குடியேறி எமக்கும் எமது தேசத்துக்கும் சம்மந்தம் அற்றவர்கள் போல் அலைகின்றோம். யூதன் எப்போதும் தனும் முன்னேறி தன்னை சார்தவனையும் முன்னேற்ற வேண்டும் என்றே எண்ணுவான். ஆனால் நாமோ ஒருவன் முன்னேறினால் அவனை தள்ளி விழுத்தவே சிந்திது எமது நேரத்தை செலவு செய்வோம், அனால் இதனை எலலோரும் உங்களுக்குள் சரிபார்த்துக்கொள்ளுங்கள். இப்படிப்பட்ட குணங்கள் எமக்கு எமது மூதாதையர்களால் கடத்தி திணிக்கப்பட்டு விட்டது. இதனை மாற்றி எம் குழந்தைகளுக்கு சரியான எண்ணங்களையும் அவர்கின் அடிப்படை இலக்குகளையும் கடத்த வேண்டிய தேவை எமக்குள்ளது.
ஈழபோராட்ட முதல் ஆயுததாரிகள் லெபனானில் அராபத்திடம் பயிற்சிபெற்றனர், சிங்களம் இஸ்ரேலிடம் கதறியது,ஆயுத விற்பனைக்காக கொழும்பில் கால்பதித்தது இஸ்ரேல், கூடவே அராபத்த்திற்கு பதிலடி கொடுக்கும் திட்டம் வேறு. இதில் இந்திய தலையீடு வந்தபின் (அன்றைய இந்தியா 100% பாலஸ்தீன் ஆதரவு) இஸ்ரேலின் ஆயுத வியாபாரம் பாதித்துவிட்டது, ஆனாலும் புலிகள் ஜெயித்தபின் அவர்களுக்கும் ரகசிய ஆயுதபயிற்சி அளித்தது , அதாவது இரு தரப்பிற்கும் உதவி. ஏன் என்றால் இப்படித்தான், இருவரில் ஒருவர் கூட பாலஸ்தீன் பக்கம் திரும்பினாலும் ஆபத்து, பாலஸ்தீன் அமைந்தால் ஜெருசலேம் இல்லை, அதனை இழந்த பின் என்ன யூதன்? பின்னாளில் புலிகள் ஒதுங்கி கொண்டனர் அதாவது கேபியின் காட்டிக்கொடுப்பின் பின் அப்படி நடந்தது, ஆனால் சிங்களம் தொடர்ந்து உறவில் இருந்தது. இறுதிபோரில் சிங்களனுக்கு இஸ்ரேலிய உதவிகள் அதிகம், எமக்கோ நண்பர்கள் இல்லை, நிச்சயமாக இஸ்ரேல் புலிதான், ஆனாலும் பின்பலத்தினை மிக பெரியதாக வைத்திருக்கும் தந்திரகார புலி, அதன் பின்பலம் அமெரிக்கா என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை.ஆனால் ஓட ஓட அடிவாங்கிய இனம், அதுவும் சென்ற இடமெல்லாம் 2 ஆயிரம் வருடமாக அடிவாங்கிய இனம். ஐரோப்பிய கிறிஸ்துவத்தாலும், அரேபிய இஸ்லாமாலும், பெரும் வல்லமை ஜெர்மனியாலும் பாதிக்கபட்ட இனம், அவர்களை எல்லாம் மீறி, சுருக்கமாக உலகத்தை மீறி தனிநாடு அடைந்தது இந்த உலகின் மாபெரும் அதிசயம். அந்த வரலாறு மிக பெரிது, ஆச்சரியமானது. அந்த வரலாற்றினை எம் பிள்ளைகளுக்கு போதியுங்கள், குழந்தைகளுக்கு புரியவையுங்கள், மிக விரைவில் எம் கனவு நிறைவேறும். காரணம், உலகத்தை வெல்ல வேண்டிய அவசியம் நமக்கு இல்லை, உலகினை நண்பர்களாக்கி கொண்டால் போதும்,
யூதரை படித்து பின்பற்ற வேண்டிய கட்டாயம், உலகில் எந்த இனத்திற்கும் இல்லா அவசியம் தமிழினத்திற்கு உண்டு. அதனைத்தான் செய்ய வேண்டுமே. ஆனானபட்ட ஹிட்லர் முன்பே, நாங்கள் யூதர்கள் இறைவனை தவிர யாருக்கும் வணக்கம் செலுத்தமாட்டோம் என மார்தட்டி நின்ற இனம் அது, அது எம்ப்போல இருந்திருந்தால் அந்த இனம் உலகினை விட்டு எப்போதோ விடைபெற்றிருக்கும், மாறமாட்டார்கள். அவர்களின் ஐக்கியம் அதுதான்.
எமது இலக்கு ஒன்றுதான் அதனை அடைந்து கொடுக்க பலர் வரலாம் போகலாம், ஆனால் எமது இலக்கு அப்படியே இருக்கிறது. காலச்சுழற்சிக்கேற்ப பல தலைவர்கள் வருவார்கள் அவர்களில் சரியானவர்களை இனங்கண்டு எம் இலக்களை இலகுபடுத்துதே எம் இலக்காக அமையவேண்டும்.

No comments:

Post a Comment