ஒருவரின் உதட்டின் வடிவமைப்பை வைத்தே ஆளுமை திறன் மற்றும் குணாதிசயங்களை கண்டுப்பிடிக்க முடியும்.
சாதாரண உதடுகள்
சாதாரண உதடு அமைப்பு கொண்டவர்கள், அவர்களுக்கு முன்னால் வைக்கப்படும் எந்தவொரு பணியைத் தீர்ப்பதற்கும் சமநிலையான, பொதுவான உணர்வு அணுகுமுறையை கையாளுவார்கள்.மற்றவர்கள் வைக்கும் விமர்சனங்களை எளிதாக எடுத்து கொள்ளும் இவர்கள் அவர்களின் கருத்துக்கு மரியாதை கொடுப்பார்கள்.
மேல் உதடு கூர்மையான கோணத்தில் இருந்தால்
இப்படியான உதட்டை கொண்டவர்கள் 100 சதவீதம் படைப்பாற்றல் கொண்டவர்களாகவும் ஓவியம் மற்றும் இசை துறையில் சிறந்த கலைஞர்களாக திகழ்வார்கள்.ஒருவரின் பெயரையும், முகத்தையும் நினைவுக்கூறுவதில் சிறந்த நினைவாற்றல் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.
இதோடு எல்லாரிடமும் சகஜமாக பழகுவார்கள்.
மேல் உதடு பெரிதாக இருந்தால்
மற்றவர்களின் கவனம் தங்கள் பக்கமே இருக்க வேண்டும் என நினைக்கும் இவர்கள் உணர்ச்சிமிக்கவர்களாகவும், கவர்ச்சியுள்ளவர்களாகவும் இருப்பார்கள்.தங்களை எப்போதும் மிக உயர்வாகவே கருதும் இவர்கள் மொத்த கவனமும் தங்கள் மீதே இருக்க அதிகளவு மெனக்கெடுவார்கள்.
மேல் உதட்டை விட கீழ் உதடு பெரிதாக இருந்தால்
இது போன்ற உதடு உடையவர்கள் பல சுவாரஸ்யமான விடயங்களை ஆராய விரும்புவார்கள். எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பதோடு பல புதிய இடங்களுக்கு செல்ல ஆசை படுவார்கள்.அதே போல, துணிச்சலான பாதையில் செல்லும் இவர்கள் தன்னுடன் வரும் மக்களை வழிநடத்தும் திறன் கொண்டவர்கள்.
இரு உதடும் பெரிதாக இருந்தால்
இப்படியான உதடுகளை கொண்டவர்கள் அடுத்தவர்களை அதிகம் பார்த்து கொள்வார்கள். அதாவது, தங்களின் சகோதரர்களையோ அல்லது செல்ல பிராணிகளையோ அக்கறையோடு கவனித்து கொள்வார்கள்.மற்றவர்களை பாதுகாக்கும் உள்ளுணர்வு இயற்கையாகவே இருக்கும்.
http://news.lankasri.com/lifestyle/03/135991?ref=recommended2
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக