தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 3 நவம்பர், 2017

பிரமிடுக்குள் என்ன உள்ளது? ரகசியத்தை கண்டறிய புது தொழில்நுட்பம்!


பிரபஞ்ச கதிர் என்னும் தொழில்நுட்பத்தினைக் கொண்டு பிரமிடுகளுக்குள் உள்ளவற்றை கண்டறிய முடியும் என விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
எகிப்து நாட்டில் பிரமிடுகள் மிக அதிகம், இந்த பிரமிடுகளுக்குள் சுமார் 30மீ முதல் 70மீ வரை வெற்றிடங்கள் உள்ளன.
எதற்காக இந்த வெற்றிடங்கள் பிரமிடுகளில் உள்ளது என்பதனை கண்டறியவும், பிரமிடுகளில் உள்ள குழிகளை கண்டறியவும் பிரபஞ்ச கதிர் தொழில்நுட்பத்தினை பயன்படுத்த உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், கிஸாவிலுள்ள நான்கு ஆயிரம் ஆண்டுகள் பழைய பிரமிட்டில், கிராண்ட் கேலரிக்கு மேலே குழிகள் போன்ற அமைப்புகள் கண்டறியப்பட்டுள்ளன.

பெரிய பாறை அமைப்புகளின் உள்ளே ஏற்படும் அடர்த்தி மாற்றங்களை இந்த பிரபஞ்ச கதிர் தொழில்நுட்பம் மூலம் விஞ்ஞானிகள் இதனை கண்டுபிடித்துள்ளனர்.

இந்த கண்டுபிடிப்பு பத்தொன்பதாம் நூற்றாண்டுக்கு பிறகு கண்டறியப்பட்டதில் மிக முக்கியமானது என கல்வியாளர்கள் விவரித்துள்ளனர்."

http://news.lankasri.com/othertech/03/135964

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக