தொலைக்காட்சி!!

Search This Blog

Saturday, November 4, 2017

இந்த ராசிக்காரங்ககிட்ட இப்படி பேசுங்க... காரியத்தை கச்சிதமா சாதிக்கலாம்!


எந்த ராசிக்காரர்களிடம் எப்படி பேசினால் காரியத்தை சாதிக்கலாம்!

நம்பிக்கை என்பது தான் வாழ்க்கை....ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒன்றில் நம்பிக்கை இருக்கும்.சிலர் யாரையும் நம்ப மாட்டார்கள்...சிலர் யாரையாவது நம்பியே வாழ்வார்கள் ... இன்னும் பலர் எது நடக்கிறதோ அது அனைத்தும் நல்லதுக்கு தான் என எண்ணிக்கொண்டு எந்த செயலிலும் ஈடுபடுவார்கள்.

இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், பலர் ஜாதகத்தை பார்த்து தான் எந்த செயலிலும் நம்பிக்கையாக ஈடுபடுவார்கள். இதில் என்ன ஒரு அழகு என்றால்,திருமண பொருத்தம் பார்ப்பதில், எந்த ராசிக்காரர்களுக்கு எந்த ராசிக்காரர் துணை பொருந்தும் என்பதை பார்த்து தான் அவர்களுக்கு நம் முன்னோர்கள் திருமணம் செய்து வைத்தனர்.

இதற்கு அடுத்தகட்டமாக நாம் நல்ல நண்பர்களாக இருப்பதற்கு கூட ராசி பொருத்தம் தான் வொர்க்கவுட் ஆகிறதோ என சில சமயத்தில் நினைக்க தோன்ற வைக்கும்..... இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க,நமக்கு ஏதாவது காரியம் ஆக வேண்டும் என்றால்,அவர்கள் எந்த ராசி என்று தெரிந்தாலே போதுமானது .

அதை வைத்தே அவர்கள் எந்த குண நலம் படைத்தவர்கள் என்பதை தெரிந்துகொண்டு, அதற்கேற்றார் போல் அவர்களிடம் பேசலாம். அந்த வகையில் எந்தெந்த ராசிகாரர்களிடம் எப்படி பேசலாம் என்பதை பார்க்கலாம்.

ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் ஒவ்வொரு குணம் இருக்கும்.எந்த ராசிக்காரர்களிடம் எப்படி பேசினால் காரியத்தை சாதித்துக் கொள்ளலாம் என்பதைப் பற்றி தெரிந்துகொள்வோம்.
மேஷம் ராசிக்காரர்களிடம்....
எப்போதும் சற்று கவனமாகவும், எச்சரிக்கையாகவும் பேசுவது நல்லது. இல்லையெனில் இவர்களுக்கு சட்டென்று கோபம் வந்துவிடும். இவர்களிடம் பாராட்டி பேசினால் இவர்களுக்குப் பிடிக்கும். ஆனால் வாக்குவாதம் செய்தால் இவர்களால் அதை ஏற்றுக் கொள்ள முடியாது.
ரிஷபம் ராசிக்காரர்களிடம்....
இவர்களிடம் பேச்சு அன்பாகவும், கனிவாகவும் இருக்க வேண்டும். அன்பாகப் பேசி எந்தக் காரியத்தையும் சாதித்துக் கொள்ளலாம்.
மிதுன ராசிக்காரர்களிடம்...
எப்போதும் அளவோடு மட்டுமே பேச வேண்டும். அளவுக்கு மீறிப் பேசினால், உங்களை அதிகம் ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்துவிடுவார்கள்.
கடகம் ராசிக்காரர்களிடம்...
அன்பாகவும் அடக்கமாகவும் இருப்பார்கள். எனவே இவங்க கிட்ட பாசமாகப் பேசினால் போதும் எல்லா உதவியும் கிடைக்கும்.
சிம்மம் ராசிக்காரர்களிடம்...
பொறுமையாகவும், நேர்மையாகவும் பேசினால் நமக்கு தேவையான உதவியைப் பெறலாம். இல்லையெனில் இவர்களிடம் எளிதில் காரியத்தை சாதிக்க முடியாது.
கன்னி ராசிக்காரர்களிடம்...
எப்போதும் நட்பை முறித்துக் கொள்ளக் கூடாது. அவர்களால் நிறைய ஆதாயம் கிடைக்கும். ஆனால் அவர்களிடம் கொஞ்சம் எச்சரிக்கையாகவே பேச வேண்டும்.
துலாம் ராசிக்காரர்களிடம்..
ஜாலியாக பேசுவார்கள். கம்பீரமாக நடந்து கொள்வார்கள். அமைதியாகவும், பொறுமையாகவும் இருப்பார்கள். அதே நேரத்தில் இவர்களிடம் சற்று கவனமாக இருக்க வேண்டும். இல்லையெனில் உங்களை பிரித்து மேய தொடங்கி விடுவார்கள்.
விருச்சிகம் ராசிக்காரர்களிடம்.....
பேசியே மயக்குபவர்கள் இவர்கள். அன்பாக அனுசரித்துப் பேச வேண்டும். இவர்களிடம் அன்பாக பேசினால் அனைத்தையும் பெறலாம். ஆனால் கோபமாக பேசினால் சுனாமியாக மாறிவிடுவார்கள்.
தனுசு ராசிக்காரர்களிடம்...
இவர்களிடமும் அன்பாக பேசி காரியத்தை சாதித்துக்கொள்ளலாம். அவர்களை நான்கு வார்த்தை பாராட்டிவிட்டால் போதும் மதிமயங்கி விடுவார்கள். அன்புக்கு அடிமையானவர்கள் தனுசு ராசிக்காரர்கள்.
மகரம் ராசிக்காரர்களிடம்...
அதிகம் புலம்புவார்கள். அப்படியே நம்ப வேண்டாம். இவர்களின் இயல்பு அது. இவர்களிடம் எச்சரிக்கையாகவே பேச வேண்டும். இவர்களிடம் ஒரு காரியத்தை சாதிப்பது கொஞ்சம் கஷ்டம் தாங்க....
கும்பம் ராசிக்காரர்களிடம்...
அனைத்தையும் அறிந்தவர்கள் போல் பேசுவார்கள். இவர்கள் சொல்வதற்கெல்லாம் சரி என்று சொன்னால் போதும் நாம் நினைத்ததை சாதித்துக் கொள்ளலாம்.
மீனம் ராசிக்காரர்களிடம்...
ஆத்துல இல்ல காத்துல கூட மீன் பிடிப்பார்கள். இவர்கள் அனைவரையும் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்று ஆவலாக இருப்பார்கள். இவர்களிடம் மிகவும் கவனமாக யோசித்துப் பேச வேண்டும். இல்லையெனில் வாய் கொடுத்து மாட்டிக்கொள்வோம்.

மேற்குறிப்பிட்ட சில டிப்ஸ் மூலம் எந்தெந்த ராசிக்காரர்கள் எது போன்ற மன நிலைமையை கொண்டிருப்பர் என்பதை நாம் எளிதில் புரிந்தக்கொண்டு அவர்களிடம் அதற்கேற்றார் போல் நடந்துக்கொள்ளலாம்.

http://www.manithan.com/astrology/04/148208

No comments:

Post a Comment