தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 30 அக்டோபர், 2014

கருவை காக்கும் கருவேப்பிலை

உணவு வகைகளில் ருசிக்காகவும், மணத்திற்காகவும் மட்டுமே கருவேப்பிலை சேர்க்கப்படுவதாக பலரும் கருதுகிறோம்.ஆனால் இதில் எண்ணற்ற மருத்துவ பலன்கள் அடங்கியுள்ளன.
கருவேப்பிலை ஒரு சத்து நிறைந்த உணவு பொருளாகும், இதில் 63 சதவிகித நீரும், 6.1 சதவிகித புரதமும், ஒரு விழுக்காடு கொழுப்பும், 4 விழுக்காடு தாதுப்புகளும், 6.4 சதவிகித நார்ச்சத்தும், 18.7 சதவிகித மாவுச்சத்தும் இருக்கின்றன.
சுண்ணாம்பு சத்து. மக்னீசியம், இரும்பு சத்து, தாமிர சத்து, கந்தக சத்து மற்றும் குளோரின், ஆக்ஸாலிக் ஆஸிட் போன்றவையும் கருவேப்பிலையில் உண்டு.
நாட்டுக் கருவேப்பிலை உணவாகவும், காட்டுக்கறிவேப்பிலை மருந்தாகவும் பயன்படுகிறது. காட்டுக் கருவேப்பிலையின் இலை சற்றுப் பெரிதாகவும் கசப்பு அதிகம் உள்ளதாகவும் இருக்கும்.
நாட்டுக் கருவேப்பிலை இலை அதனைவிடச் சிறிதாகவும், இனிப்பும், துவர்ப்பும் நறுமணமும் உள்ளதாக இருக்கும்.
கருவேப்பிலையின் இலை, ஈர்க்கு, பட்டை, வேர் போன்ற இதர பொருட்களும் உணவாகவும் மருந்தாகவும் பயன்படுகிறது.
கருவேப்பிலை குழம்பு
துவரம்பருப்பு, மிளகு, வரமிளகாய், கருவேப்பிலை மற்றும் புளி ஆகியவற்றை எண்ணெயில் வதக்கி அரைக்கவும். இத்துடன் எண்ணெயில் வதக்கிய தேங்காய் துருவலை சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும்.
எண்ணெய் விட்டு, கடுகு, பெருங்காயம், கருவேப்பிலை சேர்த்து தாளித்து அரைத்த கலவை சேர்த்து கொதிக்கவிட்டு கெட்டியான குழம்பானதும் இறக்கவும்.
பயன்கள்
இதை கர்ப்ப காலத்தில் பெண்கள் சாப்பிடுவதன் மூலம் வளரும் கருவுக்கு அதிக ஆரோக்கியம் கிடைக்கும்.
பெண்களுக்கு இருக்கும் முடிக் கொட்டும் பிரச்சனை நீங்குவது மட்டுமின்றி கண்பார்வையும் நன்றாக தெரியும்.
கருவேப்பிலை துவையல்
கடாயில் எண்ணெய் ஊற்றி கருவேப்பிலை, தேவையான அளவு இஞ்சி, பச்சைமிளகாய் போன்றவற்றை வதக்கி கொள்ள வேண்டும்.
இதில் சிறிதளவு உப்பு சேர்த்து மிக்சியில் மிதமாக அடித்தால், கருவேப்பிலை துவையல் ரெடி.
பயன்கள்
இதை சாதத்தில் கலந்து சாப்பிடுவதன் மூலம் புத்தி கூர்மை அதிகரிக்கும், பித்தத்தை தணித்து உடலின் உஷ்ணத்தை குறைக்க உதவும்.
சளி இரும்பலை உடனடியாக விரட்டியடிக்கும், மேலும் மனநலம் சரியில்லாதவர்களுக்கு இதை அளிப்பதன் மூலம், பைத்தியம் நீங்கி சுயநினைவு திரும்ப பல வாய்ப்புகள் உள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக