தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 24 அக்டோபர், 2015

ஒரு கைப்பேசியில் தனித்தனியாக WhatsApp பயன்படுத்த வேண்டுமா?

ஒரு கைப்பேசியில் இரண்டு நம்பர்களுக்கும் தனித் தனியாக WhatsApp பயன்படுத்தும் விதமாக புதிய செயலி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
திசா (Disa) என்ற இந்த செயலியின் மூலம், உங்கள் கைப்பேசியில் உள்ள இரண்டு எண்களுக்கும், தனித்தனியாக WhatsApp பயன்படுத்திக் கொள்ளலாம்.
இதற்கான வழிமுறைகள் மிக எளியவை. திசா செயலியைhttps://play.google.com/store/apps/details?id=com.disa&hl=en என்ற இணைப்பின் மூலம் உங்கள் கைப்பேசியில் பதிவிறக்கம் செய்து Install செய்து கொள்ளுங்கள்.
அதில் ‘+’ என்ற தேர்வை அழுத்தி, உங்கள் மற்றொரு எண்ணை (அதாவது Whatsapp பயன்படுத்தாத எண்) '+91' என குறியீட்டோடு தரவும். (உதாரணம்: +91 98765*****) அடுத்து Verify செய்வதற்கான கட்டம் வரும். இதைத் தாண்டினால் ஒரே நேரத்தில் இரண்டு எண்களுக்கு தனித்தனியாக WhatsApp பயன்படுத்த உங்கள் கைப்பேசி தயாராகிவிடும்.
ஆனால் தற்போது திசா செயலியில் உள்ள WhatsApp   மூலம் செய்திகளை அனுப்ப மட்டுமே முடியும்.WhatsApp கால்கள் (WhatsApp call) செய்ய முடியாது.
அதே போல Android கைப்பேசிகளில் மட்டுமே தற்போது இந்த செயலி வேலை செய்யும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக