தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 23 அக்டோபர், 2015

அசைவ உணவால் பற்களுக்கு ஆபத்தா? கலர் கலரான கேசரி பிரியரா? தெரிந்துகொள்ளுங்கள்

அசைவ உணவுகளை ஆசையாக ருசித்து சாப்பிடும்போது அவை பற்களுக்கு இடையில் சிக்கிக்கொண்டால் பெரும் தொல்லையாக இருக்கும்.
அவ்வாறு சிக்கலை சந்திப்பர்வர்களுக்கு இதோ டிப்ஸ்
அசைவ உணவு வகைகளில் பெரும்பாலானவற்றை மெல்லும் போது, அவை மெல்லிய நார்களாக பிரியும்.
பற்களின் இடையே சிறிய இடைவெளி இருந்தாலும், அவற்றில் இவை புகுந்து விடும். ஈறு நோய் உள்ளவர்கள், பல்சொத்தை உள்ளவர்களுக்கு, பற்களின் நடுவே உள்ள இடைவெளி, பெரிதாக இருக்கும்.
இதனால் அசைவ உணவுகள் சிக்கிக்கொள்வது அதிகமாக இருக்கும்.
இதற்கு, "டென்டல் ப்ளாஸ்' என்ற நூலை, பற்களின் இடையே விட்டு சுத்தம் செய்யலாம். இதன் மூலம் உணவுத் துண்டுகளை எடுப்பதுடன், பற்களின் இடுக்குகளையும் சுத்தம் செய்யலாம்.
பல்குச்சி, பின், ஊசி போன்றவற்றை கண்டிப்பாக பயன்படுத்தக் கூடாது.
இது இடைவெளியை பெரிதாக்கி ஈறுகளை புண்ணாக்கி விடும். இவற்றை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது.
எப்போதும் பற்களின் நடுவே உணவு மாட்டிக் கொள்ளும் தொந்தரவு இருப்பவர்கள், பற்களின் இருபக்கமும் உள்ள இடைவெளியை மூடும் சிகிச்சை செய்து கொள்ள வேண்டும்.
ஈறுகள் கீழே இறங்கி, இடைவெளி ஏற்பட்டு இருந்தால் ஈறுகளின் அடியில் சுத்தம் செய்து, மருந்து வைத்து கட்டி, ஈறுகளை பழைய நிலைக்கு கொண்டு வரவேண்டும்.
இது போன்ற சிகிச்சைகளாலும், சரியாக சுத்தம் செய்யும் முறைகளாலும், பற்களின் இடையே அசைவ உணவு மாட்டிக் கொள்ளாமல் தவிர்க்கலாம்.
கலர் கலரான கேசரி
கேசரிக்கு கலர் கொடுப்பதற்காக உபயோகப்படுத்தப்படும் ரசாயன பொருட்களால், உணவு பாதையில் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆகவே, கலர் எதுவும் உபயோகப்படுத்தாத கேசரியை உண்பது நல்லது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக